நீங்க இப்படி பண்ணா ரசிகர்களும் ரோஹித்தை பத்தி தப்பா தான் நெனைப்பாங்க – அஷ்வின் வெளிப்படை

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரினை அசத்தலாக கைப்பற்றிய இந்திய அணியானது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்த தொடரின் கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சதம் அடித்து இந்திய அணியின் பிரமாதமான வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

Suryakumar rohit sharma

- Advertisement -

மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டு ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 30-வது சதத்தையும் பூர்த்தி செய்தார். இந்நிலையில் இந்த போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனம் 2020-ஆம் ஆண்டிற்கு பிறகு ரோகித் அடிக்கும் முதல் சதம் இது என்று அடிக்கோடிட்டு காண்பித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போட்டி முடிந்தவுடன் பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் : நான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த முதல் சதம் என்று ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் நான் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 12 போட்டிகள் தான் விளையாடி உள்ளேன் என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. மேலும் 3 ஆண்டுகள் என்பது மிக அதிகமான காலமாக தோன்றுகிறது.

Rohit-Sharma

ஆனாலும் நான் விளையாடியது ஒரு சில போட்டிகள் தான். ஒளிபரப்பு நிறுவனம் இதுபோன்ற புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறினார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னணி வீரரான அஸ்வின் ரோகித்துக்கு ஆதரவாக சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : ஒளிபரப்பு நிறுவனங்கள் புள்ளிவிவரம் தொடர்பான செய்திகளை பக்குவமாக கையாள வேண்டும். ஏனெனில் மூன்று வருடங்களுக்குப் பிறகு நான்கு வருடங்களுக்கு பிறகு என்று நீங்கள் புள்ளி விவரத்தை வெளியிட்டால் ரசிகர்களும் அதை பார்த்து ரோகித்தை நீக்குங்கள் என்று தான் நினைப்பார்கள்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் இல்லனா மொத்த இந்திய டீமும் காலி – என்று சொல்வதற்கான 3 புள்ளிவிவரங்கள் இதோ

ஆனால் தீவிர ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட்டை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். என்னை பொறுத்தவரை ரோகித் பேட்டிங்கில் எந்தவித குறையும் கிடையாது. கடந்த பல ஆண்டுகளாகவே அவர் எவ்வாறு விளையாடி உள்ளார் என்பது உலகிற்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

Advertisement