டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் இல்லனா மொத்த இந்திய டீமும் காலி – என்று சொல்வதற்கான 3 புள்ளிவிவரங்கள் இதோ

Suryakumar Yadav.jpeg
- Advertisement -

இந்தியாவுக்காக விளையாடும் லட்சியத்தில் கடுமையாக போராடி தாமதமாக 30 வயதில் அறிமுகமான மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் கடந்த 2 வருடங்களில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்களை மிஞ்சி அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்று லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக அவதரித்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகவும் முன்னேறி சாதனை படைத்துள்ளார். பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் எதிரணி எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கும் அவர் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் கொண்டாடும் அளவுக்கு புதிய ஷாட்களை விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

SUryakumar Yadav 112

- Advertisement -

மேலும் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதையும் வென்ற அவர் ஐசிசி பேட்டிங் தர வரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் ஆசிய வீரராக சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் மிகச் சிறந்த வீரராக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முதுகெலும்பாகவும் இதயமாகவும் உருவெடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இது பாதி மகிழ்ச்சியும் மீதி கவலையும் கொடுக்கும் அம்சமாக உள்ளது. ஏனெனில் அவரும் மனிதன் தானே என்ற அடிப்படையில் அவர் அடிக்காத போட்டிகளில் இதர வீரர்கள் கைகொடுக்க தவறுவதால் இந்தியாவும் தோல்வியடைகிறது.

மொத்தம் டீமும் காலி:
அந்த வகையில் தற்போதைய நிலைமையில் இந்திய டி20 அணி சூரியகுமார் யதாவை மட்டுமே நம்பியுள்ளது என்று சொல்வதற்கான காரணங்களை பற்றி பார்ப்போம்:

Suryakumar-Yadav

1. வெற்றி நாயகன்: இதுவரை சூரியகுமார் யாதவுடன் இந்தியா 45 போட்டிகளில் களமிறங்கி 34 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அந்த 34 போட்டிகளில் அசத்தலாக செயல்பட்ட சூரியகுமார் 1192 ரன்களை 51.82 என்ற அபாரமான சராசரியில் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார். அதே சமயம் தோல்வியடைந்த 11 போட்டிகளில் அவர் 420 ரன்களை 38.18 என்ற சராசரியில் மட்டும் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதிலிருந்து அவர் பெரும்பாலும் அதிரடியாக அடித்து வெற்றி பெற வைக்கிறார் இல்லையென்றால் அவுட்டாகி விடுகிறார் என்பது தெளிவாகிறது. அத்துடன் அவர் அவுட்டாகும் போது இதர வீரர்கள் சிறப்பாக செயல்படாமல் இந்தியாவின் தோல்விக்கு காரணமாவதும் தெரிகிறது.

Suryakumar Yadav Virat kohli

2. கிங் கோலி: 2022 சர்வதேச கிரிக்கெட்டில் 1164 ரன்களை விளாசி அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக சூரியகுமார் அசத்தினார். அவருக்கு அடுத்தபடியாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 20 போட்டிகளில் 781 ரன்களை 55.78 என்ற சிறப்பான சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

அவரை தவிர்த்து யாருமே 700 ரன்கள் கடக்காத நிலையில் 3வது இடத்தில் ரோகித் சர்மாவும் (656) 4வது இடத்தில் பாண்டியாவும் (607) உள்ளனர். இது சூரியகுமார் அவுட்டாகும் பெரும்பாலான போட்டிகளில் விராட் கோலி தான் இந்தியாவை காப்பாற்ற போராடுகிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

3. சூர்யாவும் கிங் கோலியும்: ஆனால் சில நேரங்களில் விராட் கோலியும் காப்பாற்ற முடியாதவராகிறார் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். ஏனெனில் 2022 டி20 உலக கோப்பை செமி பைனலில் இங்கிலாந்துக்கு எதிராக சூரியகுமார் 14 ரன்களில் அவுட்டானதும் விராட் கோலி – ஹர்திக் பாண்டியா ஆகியோர் இணைந்து அரை சதமடித்துப் போராடியும் 168 என்ற குறைவான ஸ்கோரை மட்டுமே எடுத்த இந்தியா இறுதியில் தோற்றது.

- Advertisement -

அதே போல் 2022 ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் சூரியகுமார் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் அரை சதமடித்தும் இந்தியா தோற்றது.

இதையும் படிங்க: பாண்டியா அணியால் இந்தியாவை பைனலுக்கு கொண்டு செல்ல முடியுமா? அந்த 2 பேரையும் கழற்றி விடாதீங்க – ரசித் லதீப் எச்சரிக்கை

இந்த இடங்களில் சூரியகுமாருக்கு பின் விராட், ரோஹித், பாண்டியா ஆகிய சீனியர்கள் பெயர்கள் தான் வருகிறதே தவிர எந்த இளம் வீரரின் பெயரும் வரவில்லை. எனவே டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் தவிர்க்க முடியாத மேட்ச் வின்னராக இருந்தாலும் அதற்காக அவரையே அதிகமாக இந்தியா சார்ந்துள்ளது. இப்படி ஒரு நிலைமையில் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் 2024 டி20 உலகக் கோப்பை இந்தியாவால் நிச்சயம் வெல்ல முடியாது என்றே சொல்லலாம். எனவே வருங்காலங்களில் நிறைய இளம் வீரர்கள் முன்னின்று இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டியது அவசியமாகிறது.

Advertisement