பாண்டியா அணியால் இந்தியாவை பைனலுக்கு கொண்டு செல்ல முடியுமா? அந்த 2 பேரையும் கழற்றி விடாதீங்க – ரசித் லதீப் எச்சரிக்கை

latif
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா எஞ்சிய 2 போட்டியில் வென்றால் தான் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக வகையில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை பிசிசிஐ செய்து வருகிறது. அதனால் கடந்த நவம்பரில் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரிலும் நடைபெற்று முடிந்த இலங்கை டி20 தொடரிலும் தற்போது நடைபெறும் தொடரிலும் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இடம் பெறவில்லை.

அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்தாலும் டி20 கிரிக்கெட்டில் இளம் வீரர்களை நோக்கி இந்திய அணி நிர்வாகம் நகர்ந்து விட்டது பல தருணங்களில் தெளிவாக தெரிகிறது. இருப்பினும் அனைத்து நேரங்களிலும் இளம் வீரர்களால் மட்டும் சாதிக்க முடியாது என்பதும் அனுபவமும் இளமையும் கலந்த அணியால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதும் சில நேரங்களில் நிரூபணமாகிறது.

- Advertisement -

தப்பு பண்ணாதீங்க:
எடுத்துக்காட்டாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 177 ரன்களை துரத்தும் போது இஷான் கிசான், கில், திரிபாதி போன்ற அனுபவமற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அப்போது சூர்யாகுமார், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று வெற்றிக்கு போராடி அவுட்டானார்கள். அந்த நிலையில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருந்திருந்தால் அந்த சரிவு ஏற்பட்டிருக்காது என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் ஹர்டிக் பாண்டியா பினிஷராக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என்று கூறியுள்ளார்.

Kohli-and-Rohit

எனவே இளம் வீரர்களால் மட்டும் இந்தியாவை டி20 உலக கோப்பை ஃபைனலுக்கு அழைத்துச் செல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரில் குறைந்தது ஒருவர் இந்திய டி20 அணிக்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுலுக்கு பதிலான மாற்று வீரர் வேண்டுமானால் உங்களுக்கு எளிதாக கிடைத்து விடலாம். ஆனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கான மாற்று வீரர்களை உங்களால் அவ்வளவு எளிதில் கொண்டு வர முடியாது”

- Advertisement -

“சுப்மன் கில், பிரிதிவி ஷா, இஷான் கிசான் போன்ற இளம் வீரர்கள் தான் வருங்காலத்தில் அந்த இடங்களில் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது அவர்கள் மிகவும் குறைந்த அனுபவத்துடன் ஒரே நேரத்தில் விளையாடுகிறார்கள். அதனால் இந்தியாவை அவர்களால் டி20 உலக கோப்பை ஃபைனலுக்கு அழைத்து செல்ல முடியுமா? கில், ஷா, திரிபாதி, ஹூடா, இஷான் போன்ற வீரர்களால் பைனலுக்கு அழைத்துச் செல்ல முடியுமா? நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு சீனியர் வீரர் இல்லாததே பிரச்சனையை ஏற்படுத்தியது”

Virat Kohli Rashid Latif

“ஒருவேளை சீனியர் வீரர் இருந்திருந்தால் கடைசி நேரத்தில் பாண்டியா போன்றவர் பினிசிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார். எனவே ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் இல்லை என்றாலும் குறைந்தது அவர்களில் யாரையாவது ஒருவரை இந்திய டி20 அணியில் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அவருக்கான மாற்று வீரரே இல்ல, டாப் ஆர்டர் அடிச்சா தான் ஜெயிக்க முடியும் – ஆஸி தொடரில் இந்தியாவை எச்சரிக்கும் இயன் சேப்பல்

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சீனியராக இருந்தும் அதிக ரன்கள் குவித்து அபாரமாக செயல்பட்ட விராட் கோலியை இதர வீரர்களுடன் கழற்றி விட நினைப்பது சரியான முடிவல்ல என்று ஏற்கனவே இந்திய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதையே தெரிவிக்கும் இவரும் விராட் கோலி போன்ற அனுபவம் மிகுந்த ஒருவர் இந்திய டி20 அணியில் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement