- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்குள் இருக்கும் இந்த கலாச்சாரத்தை மாற்றியாக வேண்டும்.. அது நடக்கனும் – ரவிச்சந்திரன் அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வந்த தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரின் இடையே திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்திய அணியில் இந்த கலாச்சாரம் மாறனும் : ரவிச்சந்திரன் அஸ்வின்

அவரது இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் வாழ்த்துக்களையும் பெற்று தந்தது. அதனை தொடர்ந்து ஓய்வு அறிவித்த பின்னர் தொடர்ச்சியாக கிரிக்கெட் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் கலந்து கொள்ளும் அஸ்வின் பல்வேறு விடயங்களை பேசி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த சில நிகழ்வுகளையும் தான் நேரில் பார்த்த பல்வேறு கிரிக்கெட் தொடர்பான விடயங்களையும் சமூகவலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதுமட்டும் இன்றி கிரிக்கெட் தொடர்பான பல்வேறு நுணுக்கமான விடயங்களையும் அவர் வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி ஒன்றினை அளித்திருந்த அஸ்வின் இந்திய அணியில் நட்சத்திர வீரர்களின் கலாச்சாரம் இருப்பதாகவும் அந்த கலாச்சாரம் இனி இந்திய அணிக்குள் இருக்கக் கூடாது என்றும் பேசியிருக்கிறார். இது தொடர்பாக பேசியிருந்த அஸ்வின் கூறுகையில் :

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் விஷயங்களை இயல்பாக்குவது மிகவும் முக்கியம். தற்போதைய இந்திய அணிக்குள் சூப்பர் ஸ்டார் வீரர்கள் என்கிற நட்சத்திர கலாச்சாரம் இருந்து வருகிறது. ஆனால் இதை எல்லாம் நாம் ஊக்குவிக்க கூடாது. எதிர்காலத்தில் அனைத்தையும் இயல்பாக்க வேண்டும். ஏனெனில் நாம் கிரிக்கெட் விளையாடும் ஒரு விளையாட்டு வீரர்கள் தான் மற்றபடி நடிகரோ, சூப்பர் ஸ்டாரோ கிடையாது.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்.. விலகிய 18 வயது வீரர்.. இணைந்த 23 வயது வீரர் – விவரம் இதோ

எனவே இந்திய அணிக்குள் நட்சத்திர வீரர்கள் என்ற கலாச்சாரம் இல்லாமல் அனைவரும் சமமான விளையாட்டு வீரர்கள் என்கிற சூழல் இருக்க வேண்டும். மேலும் வீரர்கள் மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய ஒரு இயல்பான ஒரு மனிதராக இருக்க வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -