மும்பை இந்தியன்ஸ் அணியில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்.. விலகிய 18 வயது வீரர்.. இணைந்த 23 வயது வீரர் – விவரம் இதோ

Mujeeb
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த ஐபிஎல் தொடரானது இந்த ஆண்டு 18 வது சீசனாக நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமும் முடிவடைந்து இன்னும் சில வாரங்களில் ஐபிஎல் தொடர் துவங்க இருக்கிறது.

மும்பை அணியில் நிகழ்ந்த முக்கிய மாற்றம் :

சம பலம் வாய்ந்த 10 அணிகள் இந்த தொடரில் மோத இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 17 சீசன்களில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் முதலிடத்தில் இருக்கின்றன.

- Advertisement -

இவ்விரு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளன. கடந்த ஆண்டு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் விளையாடிய மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது.

இதன் காரணமாக இந்த ஆண்டு மீண்டும் மிகச் சிறப்பான சம்பேக் கொடுத்து கோப்பையை கைப்பற்றும் என்பது மும்பை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆப்கானிஸ்தானை சேர்ந்த 18 வயது இளம் வீரரான அல்லாஹ் கசான்ஸர் என்பவரை 4 கோடியே 80 லட்ச ரூபாய்க்கு மும்பை அணி போட்டி போட்டு எடுத்தது.

- Advertisement -

இதன் காரணமாக அவர் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரானது துவங்கு சில வாரங்களே இருக்கும் வேளையில் தற்போது அவர் காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : நாங்க சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடப்போவதுக்கு காரணமே இதுதான் – வங்கதேச கேப்டன் அதிரடி

மேலும் அவரது இந்த விலகலுக்கு பின்னர் மாற்று வீரராக அதே நாட்டை சேர்ந்த 23 வயதான முஜிபுர் ரஹ்மானை மும்பை அணியில் சேர்த்து முக்கிய மாற்றம் ஒன்றினை அந்த அணி நிர்வாகம் நிகழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுக்ளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement