சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியின் மூலம் நடத்தப்படும் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை ஆகிய தொடங்களுக்கு முற்றிலும் வித்தியாசமான தொடராக சாம்பியன்ஸ் டிராபி தொடர் பார்க்கப்படுகிறது. ஏனெனில் மற்ற தொடர்களை போன்று அனைத்து அணிகளும் பங்கு பெறாமல் தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களில் உள்ள அணிகளை வைத்துமே நடத்தப்படும் வரும் தொடராக சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்று வருகிறது.
எங்களாலும் நினைச்சதை செய்ய முடியும் : நஜ்முல் ஷாண்டோ
இதுவரை சாம்பியன்ஸ் டிராபி தொடரானது எட்டு முறை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப் போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடர் குறித்த சுவாரஸ்யமான பல விவாதங்களும் சமூக வலைதளத்தில் நிலவி வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பேசியுள்ள வங்கதேச அணியின் கேப்டன் நஜ்மல் ஷாண்டோ வங்கதேச அணியால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றிபெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் சாம்பியனாகவே சாம்பியன் டிராபி தொடருக்கு செல்கிறோம். இந்த தொடரில் விளையாடும் எட்டு அணிகளுமே சாம்பியன் பட்டத்தை வெல்லும் தகுதியான அணிகள். அனைத்து அணிகளுமே பலமான அணிகளாக இருப்பதால் கோப்பையை வெல்ல சமமான வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.
எங்கள் அணியிலும் பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என சரிசமமான பலத்தில் வீரர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய பணியை நாங்கள் சரியாக செய்தால் நிச்சயம் எங்களால் சாம்பியனாக முடியும் என்று நஜ்முல் ஷாண்டோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் ஆஸியை வீழ்த்தி.. இந்தியா அந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பாங்க.. மைக்கேல் கிளார்க்
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணியானது பிப்ரவரி 20-ஆம் தேதி இந்திய அணியையும், பிப்ரவரி 24-ஆம் தேதி நியூசிலாந்து அணியையும், பிப்ரவரி 27-ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.



