- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சரிந்த டாப் ஆர்டர். தாங்கிப்பிடித்த தமிழக வீரர் அஷ்வின் – ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அசத்தல்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று வாண்டரர்ஸ் மைதானத்தில் துவங்கியது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து இந்த இரண்டாவது போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 36 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. 26 ரன்கள் எடுத்த நிலையில் அகர்வால் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் இந்த போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் புஜாரா 3 ரன்களிலும், ரஹானே ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறியதால் இந்திய அணி முதல் இன்னிங்சில் துவக்கத்திலேயே மிகப்பெரிய சிக்கலை சந்தித்தது. அப்போது 49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

பின்னர் கோலிக்கு பதிலாக இடம்பிடித்த விஹாரி ராகுலுடன் கைகோர்த்து நிதானமாக ரன் குவிப்பை வழங்கி வந்தார். பின்னர் அவரும் ஒரு கட்டத்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் இந்திய அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் ராகுல் (50) மற்றும் ரிஷப் பண்ட் (17) ஆகியோர் ஆட்டம் இழந்து வெளியேற இந்திய அணி 157 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து தவித்தது. எப்படியாவது 200 ரன்களாவது குறைந்தபட்சம் குவித்து விட வேண்டும் எஎன்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இப்படி இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இது டெஸ்ட் போட்டிதானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு ஒருநாள் போட்டியை போன்று அதிரடியை காட்டினார். 50 பந்துகளை சந்தித்த அவர் 46 ரன்கள் குவித்து இந்திய அணி 200 ரன்களை கடக்க பெரிய உதவி செய்தார். ஒரு பக்கம் விக்கெட் தொடர்ந்து விழுந்து போதிலும் தொடர்ச்சியாக அஷ்வின் ரன் குவிப்பில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பெரிய மகிழ்ச்சி அளித்தது.

- Advertisement -

இதையும் படிங்க : 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே இப்படி அவுட் ஆகுறது – இதுவே முதல்முறையாம்

மேலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் இந்த மைதானத்தில் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியாத நிலையில் அஷ்வின் அசத்தினார். பின்னர் இறுதி நேரத்தில் பும்ராவும் தனது பங்கிற்கு இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை பறக்க விட இந்திய அணி 202 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் தற்போது விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 35 ரன்கள் குவித்து 167 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by