80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே இப்படி அவுட் ஆகுறது – இதுவே முதல்முறையாம்

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று ஜோகனஸ்பர்க் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியானது 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ராகுல் 50 ரன்களும், அஷ்வின் 46 ரன்களும் குவித்தனர். பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 35 ரன்கள் குவித்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

ngidi

மேலும் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு அணிகளுமே முக்கியமான ஒன்று என்பதனால் இன்றைய போட்டியும் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மோசமான சாதனை ஒன்றை நேற்றைய போட்டியின் போது நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி 2013-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய ரஹானே இதுவரை 80 போட்டிகளில் விளையாடி 4863 ரன்களை குவித்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் இவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரகானே இப்படி முதல் பந்திலேயே ஆட்டம் என்பது இதுவே முதல் முறை. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வரும் ரஹானே இப்படி தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆவது இதுவே முதல் முறை.

Rahane

இதன் காரணமாக தனது எட்டு வருட சாதனையை அவர் நேற்று வீணடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட 167 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இருப்பினும் இன்றைய 2-வது இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் நிச்சயம் அவர்களை 200 ரன்களுக்குள் வீழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : 202 ரன்தான் அடிச்சாங்கன்னு கவலைப்படாதீங்க. இப்போவும் நமக்கு தான் மேட்ச் பேவரா இருக்கு – எப்படி தெரியுமா?

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இரண்டாம் நாள் காலை முற்றிலும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் போட்டி துவங்கிய ஓரிரு மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement