உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சந்தித்த தோல்விக்கு பிறகு. தனது வருத்தத்தை பகிர்ந்த – தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

தமிழக கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் இடம் பிடித்தார். அப்படி இடம்பிடித்த அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி இருந்தார்.

அந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருந்த அஸ்வின் அதனை தொடர்ந்தும் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அணியின் காம்பினேஷனை கருத்தில் கொண்டு அவர் அதற்கு அடுத்த 10 போட்டிகளில் இடம்பெறவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த இறுதிப்போட்டியில் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய அணியின் மிடில் ஆர்டர் சுழற்பந்து வீச்சிற்கு எதிராக தடுமாறுவதாலும், அஸ்வின் அனுபவ வீரர் என்பதினாலும் இறுதிப்போட்டியில் விளையாட வேண்டும் என்பது பலரது கருத்தாகவும் இருந்தது.

ஆனால் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற்று வந்ததால் அணியின் காம்பினேஷனை மாற்ற விரும்பாத ரோகித் சர்மா அதே அணியுடனே இறுதி போட்டியிலும் பங்கேற்றுகிறார். இறுதி போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியும், அணியின் வீரர்களும் சொல்ல முடியா சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் சில தகவல்களை பகிர்ந்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அந்த கருத்தில் : நேற்று இரவு இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த தொடரில் நமது அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நினைவில் கொள்ள பல நாட்கள் இருக்கின்றன.

இதையும் படிங்க : உங்க பர்பார்மென்ஸ்க்கு தலை வணங்குறேன்.. நேரலையில் கலங்கிய கைஃப்.. இந்திய வீரருக்கு பாராட்டு

குறிப்பாக இந்த தொடரில் விளையாடிய விராத் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு நான் தனிப்பட்ட முறையில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது எப்படி இருப்பினும் ஆஸ்திரேலியா அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் இந்த போட்டியில் விளையாடிய விதம் நம்ப முடியாத வகையில் அற்புதமாக இருந்தது. ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என அஸ்வின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement