உங்க பர்பார்மென்ஸ்க்கு தலை வணங்குறேன்.. நேரலையில் கலங்கிய கைஃப்.. இந்திய வீரருக்கு பாராட்டு

Mohammed Kaif
- Advertisement -

கோலகலமாக நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு உச்சகட்ட கொண்டாட்டத்தையும் இந்திய ரசிகர்களுக்கு மெகா சோகத்தையும் கொடுத்துள்ளது. ஏனெனில் இத்தொடரில் ஆரம்பத்தில் தடுமாறிய ஆஸ்திரேலியா அதன் பின் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று செமி ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்து ஃபைனலில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 6வது கோப்பையை வென்றது.

மறுபுறம் சொந்த மண்ணில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக நடைபெற்ற இத்தொடரில் ஆரம்பம் முதலே ரோகித் சர்மா தலைமையில் எதிரணிகளை பந்தாடிய இந்தியா 9 லீக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்றது. அத்துடன் செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை முதல் முறையாக தோற்கடித்து வென்ற இந்திய அணியில் விராட் கோலி முதல் பும்ரா வரை அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் இருந்தனர்.

- Advertisement -

கைப் பாராட்டு:
அதனால் 2011 போல கண்டிப்பாக இம்முறை கோப்பையை முத்தமிடுவோம் என்று இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை ஆரம்பத்திலேயே கோட்டை விட்டது.

அந்த வகையில் 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிடும் லட்சியத்தை கடைசியில் தவற விட்டதால் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய அணியின் முதுகெலும்பு வீரர்கள் வெளிப்படையாகவே கண்ணீர் விட்டார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலியா வென்றாலும் இந்த உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கும் இந்திய அணிக்கும் தாம் தலை வணங்குவதாக முகமது கைஃப் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கலங்கிய கண்களுடன் நேரலையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அந்த அணி இந்த உலக கோப்பையை வென்றது என்பதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஏனெனில் இந்திய அணி தான் சிறப்பாக செயல்பட்டது. இன்று அவர்கள் தோல்வியை சந்தித்தாலும் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நிறைய வெற்றிகளை பதிவு செய்தனர். இது போன்ற மோசமான நாட்கள் சில நேரங்களில் உங்களுக்கு வரும்”

இதையும் படிங்க: உங்க பர்பார்மென்ஸ்க்கு தலை வணங்குறேன்.. நேரலையில் கலங்கிய கைஃப்.. இந்திய வீரருக்கு பாராட்டு

“2003இல் ரிக்கி பாண்டிங் சதமடித்த போது இந்திய அணியின் தோல்வியில் நான் இருந்தேன். அப்போது எங்களுடைய நெஞ்சங்கள் உடைந்தது. அதனால் ரோகித் சர்மாவின் உணர்வை நான் என்னால் உணர முடியும். வருங்காலத்தைப் பற்றி நமக்கு தெரியாது. ஆனால் என்னுடைய இதயத்திலிருந்து சொல்கிறேன் 2023 உலகம் கோப்பையில் இந்திய அணி வெளிப்படுத்திய செயல்பாடுகளை பெருமையாக பார்த்தேன். குறிப்பாக ரோகித் சர்மாவின் செயல்பாடுகளுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.

Advertisement