500 விக்கெட்டை விடுங்க.. 3வது போட்டியில் கும்ப்ளேவை முந்தி அஸ்வின் படைக்க உள்ள ஆல் டைம் சாதனை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதற்கு பதிலடியாக இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை காண்பித்துள்ளது.

முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக செயல்பட்ட அஸ்வின் நீண்ட வருடங்கள் கழித்து விக்கெட் எடுக்கவில்லை. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் வெற்றியில் பங்காற்றி இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர் என்ற பிஎஸ் சந்திரசேகரின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

சாதிப்பாரா அஸ்வின்:
ஆனால் அந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து 499 விக்கெட்களை எடுத்த அவர் கடந்த போட்டியிலேயே 500 விக்கெட்டுகளை எடுக்காமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. எனவே மூன்றாவது போட்டியில் முதல் விக்கெட்களை எடுக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை எடுத்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைப்பார்.

அதை விட மூன்றாவது போட்டியில் அஸ்வின் மற்றொரு அபார சாதனையும் படைக்க உள்ளார். அதாவது தன்னுடைய கேரியரில் இந்திய மண்ணில் இதுவரை விளையாடிய 57 டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் 346* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனவே அடுத்த போட்டியில் இன்னும் 5 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்களை எடுத்த பந்து வீச்சாளர் என்ற அனில் கும்ப்ளேவின் ஆல் டைம் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைப்பார்.

- Advertisement -

இதுவரை அந்த சாதனையை இந்திய மண்ணில் விளையாடிய 63 டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகள் எடுத்து அனில் கும்ப்ளே தன்வசம் வைத்துள்ளார். அஸ்வின் 346 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அதே பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹர்பஜன் சிங் 265 விக்கெட்களுடன்
உள்ளார். எனவே சொந்த மண்ணில் சிறப்பாக செயல்படக்கூடிய அஸ்வின் 500 விக்கெட்களுடன் இந்த சாதனையையும் மூன்றாவது போட்டியில் படைப்பார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க: தேவ்தத் படிக்கல் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாக சேப்பாக்கம் மைதானத்தில் செய்த – இந்த சம்பவம் தான் காரணமாம்

இதைத் தொடர்ந்து நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. எனவே இரண்டாவது போட்டியில் அந்த முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்றது போல மூன்றாவது போட்டியிலும் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க இந்தியா போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement