அஷ்வின் மீது விமர்சனங்களை வைத்த சங்கக்காரா – சரியான ரிப்ளை கொடுத்த தமிழக வீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் தமிழக வீரரான ரவிசந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின் 17 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். முக்கியமான போட்டிகளில் அவர் பந்து வீச்சில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அதோடு ரன்களையும் அதிகளவு விட்டுக்கொடுத்ததால் பெரிய அளவில் அவரது இந்த செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியது.

Ravichandran Ashwin RR

- Advertisement -

இந்நிலையில் அவரது பந்து வீச்சு குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா கூறுகையில் : அஷ்வின் ஒரு ஓவரில் 3 பந்துகளை வித்தியாசமாக வீசுகிறார். சாதாரணமாக 3 பந்துகளை வீசுகிறார். அப்படி வீசும்போது விக்கெட்டுகள் கிடைக்காது. தொடர்ச்சியாக அவரது பாணியிலேயே பந்து வீசினால் தான் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

இப்படி அவர் குறித்த இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அஷ்வின் கூறுகையில் : நான் எப்போதுமே என்னுடைய பவுலிங்கில் தர மதிப்பீட்டை பார்க்கவே மாட்டேன். அப்படி வீசி இருக்கலாம், இப்படி பந்து வீசி இருக்கலாம் என எப்போதுமே நினைத்ததில்லை.

Ashwin Hetmayer

எனக்கு களத்தில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படுத்தி வருகிறேன் என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசியுள்ள அஷ்வின் கூறுகையில் :

- Advertisement -

தொடர்ச்சியாக நான் ஐந்து மாதங்களாக பயோ பபுளில் விளையாடி வந்துள்ளேன். எனவே தற்போது இந்த தொடரில் இடம் கிடைக்காததில் எனக்கு வருத்தம் கிடையாது. சுதந்திரமாக வீட்டில் இருக்கிறேன் இப்போது எனக்கு கிடைத்துள்ள இந்த நேரம் ஓய்வுக்கானது என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனை அவுட் செய்ய உதவினார் – தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப் பற்றி வியக்கும் இளம் வீரர்

இந்த ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளதால் அவர்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. இருப்பினும் அவர் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் மீண்டு வருவார் என்பதே அனைவரும் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement