இனிமேலும் லேட்டானா அது நமக்கு தான் டேஞ்சர். அணிக்குள் இணைய இருக்கும் சீனியர் வீரர் – இந்திய அணியில் மாற்றம்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தங்களது 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை துபாய் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதே பலரது கவனத்தை ஈர்க்கும் விடயமாக மாறியுள்ளது.

varun 1

- Advertisement -

ஏனெனில் என்னதான் இந்திய அணி பலம் வாய்ந்த அணி என்று அதிகம் பேசப்பட்டாலும் அணியில் உள்ள சில வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடர்களில் தனது அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரின் பந்துவீச்சை பாகிஸ்தான் வீரர்கள் எளிதாக எதிர்கொண்டு ரன் குவித்ததன் காரணமாகவும், சர்வதேச அளவில் பெரிய அனுபவம் இல்லாதவர் என்கிற காரணத்தினாலும் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

ashwin

அதேவேளையில் மற்றொரு தமிழக பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் வருணுக்கு பதிலாக விளையாடுவார் என்று தெரிகிறது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த அஷ்வின் டி20 கிரிக்கெட்டில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : எதிர்ல நின்னு பேச தைரியம் இல்லாதவங்க தான் இப்படி பண்ணுவாங்க – விட்டு விளாசிய விராட் கோலி

மேலும் அனுபவ வீரரான அஷ்வின் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பதையும், சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் சரியாக செய்வார் என்பதன் காரணமாக வருன் சக்கரவர்த்திக்கு பதிலாக அந்த இடத்தில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றம் நிச்சயம் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement