சென்னை டூ தரம்சாலா.. 50 ஆயிரம் செலவு செய்து சென்ற 2 இளைஞர்களுக்கு இன்பப்பரிசு வழங்கிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தரம்சாலா நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி வரலாறு படைத்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது தமிழக வீரரும், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நூறாவது போட்டியாக அமைந்தது. இதனால் இந்த போட்டிக்கு முன்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அஸ்வின் முதல் இன்னிங்சில் நான்கு விட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து வெற்றிக்கு தேவையான முக்கிய நேரத்தில் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அணில் கும்ப்ளேவின் சாதனையையும் முறியடித்தார்.

அதோடு இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கும் மிக முக்கியமான காரணமாக அஷ்வின் திகழ்ந்தார். இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினை நேரில் காண வேண்டும் என்பதற்காக சென்னையில் இருந்து தரம்சாலா வரை 2 ரசிகர்கள் சென்றுள்ளனர்.

- Advertisement -

அதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் செலவு செய்து நேரில் சென்ற இரண்டு ரசிகர்களையும் அஸ்வின் சந்தித்தது குறித்த தகவல் வெளியாக்கி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் சென்னையிலிருந்து தரம்சாலா வரை சென்ற ரசிகர்கள் அஷ்வினின் நூறாவது டெஸ்ட் போட்டி குறித்த பேனரை கையில் ஏந்தி நின்றனர்.

இதையும் படிங்க : மகளிர் ஐபிஎல் 2024 : 1 ரன்னில் பறிபோன ஆர்சிபி வெற்றி.. பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா? கால்குலேட்டர் முடிவுகள்

அதனை கவனித்த அஸ்வின் போட்டி முடிந்த பின்னர் அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மட்டுமின்றி ஆட்டோகிராப் வழங்கி அவருக்கு இன்பப்பரிசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement