மகளிர் ஐபிஎல் 2024 : 1 ரன்னில் பறிபோன ஆர்சிபி வெற்றி.. பிளே ஆஃப் செல்ல வாய்ப்பிருக்கா? கால்குலேட்டர் முடிவுகள்

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் 2024 டி20 தொடர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் மார்ச் 10ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 17வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்களில் 181/5 ரன்கள் அடுத்து அசத்தியது.

அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிகஸ் 58 (36) அலிஸ் கேப்சி 48 (32) கேப்டன் மெக் லென்னிங் 29 (26) ஷபாலி வர்மா 23 (18) ரன்கள் எடுத்தனர். பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக இளம் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் மீண்டும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 182 ரன்களை துரத்திய பெங்களூருவுக்கு ஆரம்பத்திலேயே கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

மீண்டும் கால்குலேட்டர்:
இருப்பினும் அடுத்ததாக வந்த நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி அதிரடியாக விளையாடி 49 (32) ரன்கள் குவித்து ரன் அவுட்டாகி சென்றார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீராங்கனை சோபி மோலினக்ஸ் தடுமாற்றமாக விளையாடி 33 (30) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த சோபி டேவின் அதிரடியாக விளையாடி 26 (16) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய இளம் வீராங்கனை ரிச்சா கோஸ் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் எதிர்ப்புறம் வந்த ஜார்ஜியா வேர்கம் வேகமாக விளையாட முயற்சித்து 12 (6) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து ரிச்சா கோஸ் அதிரடியாக விளையாடியதால் வெற்றியை நெருங்கிய பெங்களூருக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

அதில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த ரிச்சா கோஸ் அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் 3வது பந்தில் டபுள் எடுக்க முயற்சித்தார். அப்போது எதிர்புறம் இருந்த தீசா கசத் ரன் அவுட்டானார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் 4வது பந்தில் 2 ரன் அடித்த ரிச்சா 5வது பந்தில் சிக்சர் அடித்தார். அப்போது கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது முடிந்தளவுக்கு போராடிய ரிச்சா கோஸ் சில இன்ச்கள் வித்தியாசத்தில் 51 (29) ரன்களில் ரன் அவுட்டானார்.

அதனால் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி திரில் வெற்றி பெற்றது. மறுபுறம் வழக்கம் போல போராடி நெஞ்சம் உடையும் தோல்வியை சந்தித்ததால் பெங்களூரு வீராங்கனைகளும் ரசிகர்களும் மனமுடைந்தனர். தற்போதைய நிலையில் 5 வெற்றிகளை பெற்ற டெல்லி மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. எனவே கடைசி பிளே ஆஃப் இடத்தை பிடிக்க தலா 3 வெற்றிகளை பெற்றுள்ள பெங்களூரு மற்றும் யூபி அணிகளிடம் போட்டி நிலவுகிறது. அதில் யூபியை (-0.365) விட பெங்களூரு (+0.027) நல்ல ரன்ரேட்டை கொண்டுள்ளது.

- Advertisement -

1. எனவே பெங்களூரு பிளே ஆஃப் செல்வதற்கு மார்ச் 12இல் நடைபெறும் தங்களுடைய கடைசி போட்டியில் மும்பையை தோற்கடிக்க வேண்டும். அதே சமயம் யூபி அணி தங்களுடைய கடைசி போட்டியில் ஏற்கனவே வெளியேறிய குஜராத் அணியிடம் தோற்க வேண்டும்.

2. அல்லது மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் பெங்களூரு வெல்ல வேண்டும். அதே சமயம் குஜராத்துக்கு எதிரான கடைசி போட்டியில் யூபி வென்றாலும் பெங்களூருவின் ரன்ரேட்டை தாண்டக்கூடாது.

2. அல்லது மும்பைக்கு எதிரான கடைசி போட்டியில் பெங்களூரு தோற்றாலும் பிளே ஆஃப் செல்ல முடியும். ஆனால் அதற்கு குஜராத்துக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் யூபி அணி ரன்ரேட்டை தாண்டாத அளவுக்கு மோசமாக தோற்க வேண்டும்.

Advertisement