முதல்நாள் ஆட்டம் முடிந்ததும் அம்பயருடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்ட அஷ்வின் – என்ன நடந்தது?

Ashwin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிராக ஏற்கனவே ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவே இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியது அதனை. தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடி வரும் இந்திய அணியானது போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே அற்புதமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பை வழங்கியுள்ளது.

- Advertisement -

மேலும் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெயிஸ்வால் 179 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ள வேளையில் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் அவர் அணியின் எண்ணிக்கையை உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இன்றைய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேரம் முடிந்ததும் இந்திய வீரர் அஸ்வின் நேரடியாக அம்பயரிடம் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாகவே களத்தில் இது போன்ற ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபடாமல் இருந்து வரும் அஸ்வின் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்ததுமே அம்பயரிடம் இப்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் கேள்வியா எழுப்பியது.

- Advertisement -

குறிப்பாக போட்டியின் கடைசி ஓவரை வீசிய ரேஹன் அகமது ஓவரை நிதானமாக கையாண்ட அஸ்வின் கடைசி பந்தை தடுத்து விளையாடி விட்டு நேரடியாக அம்பயரிடம் சென்று கைநீட்டி ஏதோ பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் அஸ்வினை இப்படி கோபம் அடைய வைத்தது ஏன்? என்ற காரணம் தெரியவில்லை.

இதையும் படிங்க : இதர பேட்ஸ்மேன்கள் 151 ரன்ஸ்.. தனி ஒருவனாக 179 ரன்ஸ்.. சேவாக் ஸ்டைலில் ஆடிய ஜெய்ஸ்வால்.. 60 வருட சாதனை

அதேபோன்று அஸ்வின் அம்பயரிடம் எதையோ சுட்டிக்காட்டியே தனது கோரிக்கை வைத்துள்ளார் என்று தெரிகிறது. குறிப்பாக இன்றைய நாள் 90 ஓவர்களை கடந்து சென்றதால் நேரமாகியும் இங்கிலாந்து அணியை பந்துவீச அனுமதித்தது ஏன் என்பது போன்ற கேள்வியை அவர் எழுப்பி இருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இது குறித்து அஸ்வின் கூறினால் மட்டுமே அதில் உள்ள உண்மை விடயம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement