முகமது ஷமி வேணாம். அவரை தூக்கிட்டு இவரை சேருங்க. லக்னோ பிட்ச்க்கு அதுதான் சூட் ஆகும் – விவரம் இதோ

Shami
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக தற்போது லீக் சுற்று போட்டிகளில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி தங்களது முதல் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதோடு இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காத அணியாகவும் இந்திய அணி திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக தங்களது 6-ஆவது லீக் போட்டியில் நவம்பர் 29-ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று நான்கு தோல்விகளை சந்தித்துள்ளதால் இந்திய அணிக்கு எதிரான போட்டி அவர்களுக்கு மிக முக்கியமான ஒரு போட்டியாக பார்க்கப்படுகிறது. எனவே அவர்கள் வெற்றிக்காகவே முழு முனைப்பையும் காட்டுவார்கள் என்பதனால் அந்த போட்டியானது இரு அணிகளுக்குமே மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கிறது.

இந்நிலையில் லக்னோ மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்த சில தகவல்கள் பலராலும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணி ஏற்கனவே ஒரு செட்டிலான காம்பினேஷனில் விளையாடி வருவதால் அணியில் பெரிய மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் லக்னோ பிட்ச் சற்று மந்தமான ஆடுகளம் என்பதனால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்வது சிறந்தது என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக முகமது சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடும் பட்சத்தில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் அஸ்வினை சேர்க்க திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக முகமது ஷமி வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நீங்க பண்ணது அநியாயம். என்னது பண்றது இதுதான் கர்மா. 4 ஆவது தோல்விக்கு பின் இங்கிலாந்து அணியை – விமர்சிக்கும் ரசிகர்கள்

ஏனெனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் கூட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மைதானம் சாதகமாக இருக்கும் என்று இந்திய அணி அஸ்வினுடம் சேர்த்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. இந்நிலையில் அதேபோன்று லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியிலும் மைதானத்தின் தன்மைக்கேற்ப, சூழலை கணக்கில் கொண்டு இந்த முடிவை கையில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக அஸ்வினுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் வரும் போட்டிகளில் மைதானத்திற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement