- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சேப்பாக்கம் மைதானம்னா போதும்.. அஷ்வின் நிகழ்த்தியுள்ள தனித்துவமான சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷாண்டோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

சாதனை நிகழ்த்திய அஷ்வின் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் நாளான இன்று வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி ஒரு கட்டத்தில் 144 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.

குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்களையும், ஜடேஜா 86 ரன்களையும் குவித்து அசத்தி இருந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வினின் இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்கத்தோடு மட்டுமின்றி அவருக்கு தனிப்பட்ட முறையில் சாதனையையும் பெற்று தந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அஸ்வின் படைத்த சாதனை யாதெனில் : ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சதம் மற்றும் அதிக முறை ஐந்து விக்கெட்டை வீழ்த்த வீரர் என்ற சாதனையை தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். அஸ்வின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் இதுவரை இரண்டு சதங்கள் மற்றும் நான்கு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 144/6 டூ 376.. இந்திய மண்ணில் வரலாறு படைத்த வங்கதேச பவுலர்.. 53 வருடத்துக்கு பின் இந்தியா அபார கமபேக்

சேப்பாக்கம் மைதானம் என்றாலே எப்போதும் அஸ்வினுக்கு ஸ்பெஷல் தான் என்பதும் அவர் இந்த மைதானத்தில் விளையாட எவ்வளவு விரும்புகிறார் என்பது இந்த இன்னிங்ஸின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -