100 ஆவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டை வீழ்த்தாமல் போனாலும் மாபெரும் சாதனையை நிகழ்த்தவுள்ள – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நூறாவது போட்டியை பூர்த்தி செய்யவுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் நூறாவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தாமல் போனாமல் கூட மாபெரும் சாதனை மைல்கல் ஒன்றினை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் நூறாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டை வீழ்த்தாமல் இருந்தாலும் உலக அளவில் 100 ஆவது டெஸ்ட் போட்டியின் முடிவில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரராக இரண்டாவது இடத்தை பிடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தில் உள்ளது.

அந்த வகையில் அஸ்வின் படைக்கப்போகும் சாதனை யாதெனில் : நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன் தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி முடித்த போது 584 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் 507 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து இருந்தாலும் இந்த நூறாவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் எடுத்தாலும் எடுக்கவில்லை என்றாலும் 100 டெஸ்ட் போட்டியின் முடிவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பார்.

இதையும் படிங்க : தோனி விரக்தி அடைந்து நான் ஒரேமுறை பாத்திருக்கேன்.. அந்த தோல்வியை அவரால ஏத்துக்க முடியல – ஷேன் வாட்சன் பகிர்வு

அவருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் அணில் கும்ப்ளே 100 போட்டிகளை பூர்த்தி செய்த போது 478 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். மேலும் இந்த பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் மெக்ராத் மற்றும் வார்னே ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி உலக அளவில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 76 வது வீரர் என்ற சாதனையையும், இந்திய அளவில் 14-வது வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் நிகழ்த்த இருக்கிறார்.

Advertisement