தோனி விரக்தி அடைந்து நான் ஒரேமுறை பாத்திருக்கேன்.. அந்த தோல்வியை அவரால ஏத்துக்க முடியல – ஷேன் வாட்சன் பகிர்வு

Watson
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 17-வது சீசனானது இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. இந்த தொடரானது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக அமையும் என்றும் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போது 42 வயதை எட்டியுள்ள தோனி இந்த தொடருடன் நிச்சயம் ஓய்வினை அறிவிப்பார் என்பதனால் பல்வேறு சுவாரசிய சம்பவங்களை தோனியுடன் பயணித்த வீரர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரராக விளையாடி இருந்த ஷேன் வாட்சன் தோனி உடனான சில நினைவுகளை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் வாட்சன் கூறியதாவது : சிஎஸ்கே அணிக்காக நான் மூன்று ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்.

அந்த மூன்று ஆண்டுகளும் எனக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக அமைந்தன. அந்த மூன்று ஆண்டுகளில் நான் ஒரே ஒருமுறைதான் தோனி விரக்தி அடைந்து நின்றதை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த ஒரு சம்பவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் விளையாடினோம்.

- Advertisement -

அந்த போட்டியின் கடைசி பந்தில் மலிங்காவிற்கு எதிராக ஷர்துல் தாகூர் ஆட்டம் இழப்பார். அப்போது ஓய்வறையில் நின்றிருந்த தோனி ஏமாற்றத்தை தாங்க முடியாமல் எதிரில் இருந்த பேக்கை எட்டி உதைத்து தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். அப்போதுதான் தோனிக்கு வெற்றி எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு புரிந்தது.

இதையும் படிங்க : முடிஞ்சா அடிச்சிக்கோங்க.. ஒரேயொரு மாற்றத்தை மட்டும் செய்து இந்திய அணிக்கு சவால் விட்ட – இங்கிலாந்து கேப்டன்

எனக்கு அந்த தோல்வியை நினைத்தால் இப்போதும் வருத்தமாக இருக்கும் என்று வாட்சன் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ள வேளையில் ஏற்கனவே பயிற்சியை ஆரம்பித்த தல தோனி தற்போது சென்னை வந்தடைந்து பயிற்சியினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement