10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்த அஜாஸ் படேலுக்கு அஷ்வின் அளித்த பரிசு

Ajaz
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முடிவுக்கு வந்ததுள்ளது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய அடுத்ததாக மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியின்போது விளையாடிய நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் முதல் இன்னிங்சில் போது இந்திய அணியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை புரிந்த 3வது வீரராக அவர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக 1999 ஆம் ஆண்டு இந்திய அணியை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை போட்டியில் அஜாஸ் படேல் நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் இப்போட்டி முடிந்த பிறகு அவருக்கு தமிழக வீரர் அஷ்வின் கொடுத்த பரிசு ஒன்று தற்போது புகைப்படமாக இணையத்தில் வைரலாகியுள்ளது. அதன்படி இந்த போட்டி முடிந்து அஜாஸ் படேலை பேட்டி கண்ட அஷ்வின் அந்த பேட்டிக்கு பிறகு இந்திய வீரர்கள் அனைவரது கையொப்பமும் பெற்ற ஒரு இந்திய ஜெர்சியினை அஜாஸ் படேலுக்கு வழங்கினார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ராகுல் டிராவிடுடன் கைகோர்த்து எப்படி இருக்கு ? – முதன்முறையாக விராட் கோலி அளித்த பதில்

மேலும் மும்பையில் பிறந்து இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அஜாஸ் படேல் தற்போது அதே மும்பையில் இந்திய அணிக்கு எதிராக 10 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement