ராகுல் டிராவிடுடன் கைகோர்த்து எப்படி இருக்கு ? – முதன்முறையாக விராட் கோலி அளித்த பதில்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிந்ததுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் வெற்றி பெற்ற இந்திய அணியானது அடுத்ததாக டெஸ்ட் தொடரை எதிர்கொண்டது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் கோலி ஓய்வில் இருந்ததால் ரஹானே கேப்டனாக செயல்பட்டார். அதனைத்தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டியின் போது மீண்டும் கோலி அணிக்கு திரும்பினார்.

iyer

- Advertisement -

இந்நிலையில் முதல்முறையாக டிராவிட் உடன் இணைந்து பணியாற்றியது எப்படி இருந்தது என்ற அனுபவம் குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் : நாங்கள் அனைவரும் இந்திய கிரிக்கெட்டிற்கு பணியாற்றி வருகிறோம். முன்பு இருந்த நிர்வாகமும், ஊழியர்களும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்

அதேபோல் தற்போது ராகுல் பாய் அணியில் இணைந்துள்ளார். இப்போதும் எங்களுடைய எண்ணம் ஒன்றாகத்தான் இருக்கிறது. அதன்படி இப்போதும் எங்களுடைய மனநிலை இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதும் இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே.

dravid 1

நான் டிராவிட் உடன் பணியாற்றுவது மிகவும் சிறப்பான ஒன்றுதான். ஏனெனில் நிறைய விடயங்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். அதுமட்டுமின்றி அவரது அனுபவங்களும் எங்களுக்கு நிறைய கிடைக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் தென்னாபிரிக்க தொடருக்கான தேர்வு குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் அதில் ஏகப்பட்ட விடயங்கள் முக்கியமானதாக இருப்பதாகவும் கோலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரஹானே டெஸ்ட் அணியில் இருப்பாரா ? மாட்டாரா ? – விராட் கோலி அளித்த சாமர்த்தியமான பதில்

அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலககோப்பை தொடருடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பாகவே டி20 கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கும் ரவிசாஸ்திரிக்கும் இடையேயான பிணைப்பு உறுதியாக இருந்த நிலையில் தற்போது புதிதாக டிராவிடுடன் அவர் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement