ரஹானே டெஸ்ட் அணியில் இருப்பாரா ? மாட்டாரா ? – விராட் கோலி அளித்த சாமர்த்தியமான பதில்

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மும்பை மைதானத்தில் நிறைவு பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ள இருக்கிறது. இந்நிலையில் அடுத்து வரும் தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

Rahane-1

- Advertisement -

அந்த வகையில இந்திய அணியின் டெஸ்ட் துணை கேப்டனான ரஹானே அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் கடைசியாக விளையாடிய 23 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதுதவிர இரண்டு முறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். எட்டுமுறை 10 ரன்களுக்குள் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக அவர் இனி வரும் தொடர்களில் இந்திய அணிக்காக விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டனாக இருப்பதால் மட்டுமே அவர் அணியில் நீடிக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இந்நிலையில் ரஹானே இந்திய அணியில் நீடிப்பாரா ? மாட்டாரா ? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாமர்த்தியமான ஒரு பதிலை அளித்துள்ளார்.

rahane

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் மட்டுமல்ல யாராலும் அவரது பார்ம் குறித்த முடிவுக்கு வர முடியாது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு அவசியம். முக்கியமான போட்டிகளில் அவர் நமக்கு சிறப்பாகவே விளையாடி வந்துள்ளார். இதன் காரணமாக தற்போது உள்ள சூழலில் அவருக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழ்நிலையில் நாம் பக்கபலமாகவும் நிற்கவேண்டும். தனி ஒருவர் மீது இப்படி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்காக ஒரு அணியாக எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கோலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது நாளே எங்களை இந்திய அணி வீழ்த்திட்டாங்க. உண்மையை ஒப்புக்கொண்ட – நியூசி கேப்டன்

இதன் காரணமாக நிச்சயம் தென்னாப்பிரிக்க தொடரிலும் ரஹானே அணியில் தொடர்வார் என்று தெரிகிறது. மேலும் ரஹானே கேப்டனாக மாற முடியாது என்பதால் அவரையே தொடர்ச்சியாக துணை கேப்டனாக இந்திய அணியில் தக்கவைக்க கோலி சாமர்த்தியமாக தனது முடிவினை எடுத்து வருவதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்தினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement