இரண்டாவது நாளே எங்களை இந்திய அணி வீழ்த்திட்டாங்க. உண்மையை ஒப்புக்கொண்ட – நியூசி கேப்டன்

Latham
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த 3-ஆம் தேதி துவங்கிய இந்த இரண்டாவது போட்டியில் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த விராட் கோலி அணிக்கு திரும்பியதால் கோலி தலைமையிலான இந்திய அணியும், அதேபோன்று முதல் போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக விளையாடாததால் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின.

latham

- Advertisement -

போட்டியின் துவக்க நாள் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியானது நான்காம் நாள் காலையிலேயே நியூசிலாந்து அணியை வீழ்த்தி 372 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் எந்த ஒரு கட்டத்திலும் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு சிரமத்தை அளிக்க முடியவில்லை என்று கூறலாம்.

அந்த அளவிற்கு இந்த போட்டி இந்திய அணிக்கு முற்றிலும் எளிதாக அமைந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் கூறுகையில் : எங்கள் அணியிடம் இருந்து ஒரு மோசமான ஆட்டம் வெளிப்பட்டுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி எங்களை கட்டுக்குள் வைத்தனர்.

ind 1

அதுமட்டுமின்றி போட்டியின் இரண்டாம் நாளே நாங்கள் முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனபோது கிட்டத்தட்ட நாங்கள் இந்த போட்டியில் இருந்து வெளியேறி விட்டோம். இதுபோன்ற மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்வது தான் சிறப்பானதாக இருக்கும். எங்களது பேட்டிங் யூனிட் ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் கிளிக்க ஆவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை டெஸ்ட் : இதுவரை நாம் ஜெயிச்சதுலேயே இதுதான் பெரிய வெற்றியாம் – எப்படி தெரியுமா?

இதுபோன்ற சூழ்நிலைகளில் இறுதிவரை நின்று பேட்டிங் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அஜாஸ் படேலுக்கு இந்த போட்டி சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. 3வது வீரராக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தியது மிகவும் அற்புதமான ஒன்று என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement