மும்பை டெஸ்ட் : இதுவரை நாம் ஜெயிச்சதுலேயே இதுதான் பெரிய வெற்றியாம் – எப்படி தெரியுமா?

iyer
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. மும்பை மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இந்திய அணி 375 ரன்கள் குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி 62 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

ind 1

- Advertisement -

அதனை தொடர்ந்து 263 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை துரத்திய நியூசிலாந்து அணிக்கு 176 ரன்களை மட்டுமே குவிக்க தற்போது இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி பெற்ற இந்த வெற்றியில் ஏகப்பட்ட சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே இந்திய அணி பலமுறை இன்னிங்ஸ் மற்றும் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் நான்காவது இன்னிங்சில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. ஏனெனில் இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியை 337 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.

ashwin 1

அதனை இந்த மும்பை டெஸ்டில் முறியடித்துள்ள இந்திய அணி 540 ரன்கள் இலக்காக நிர்ணயித்து 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. அதே போன்று டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணி பெற்ற மோசமான தோல்வியாக இந்த தோல்வி அவர்களுக்கு அமைந்துள்ளது. இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் 358 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து நீக்கப்படவுள்ள சீனியர் வீரர். அவர் இனிமே வேணாம் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

அதன்பிறகு தற்போது இந்திய அணிக்கு எதிராக தான் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறார்கள். மேலும் இந்த தோற்ற போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக அஜாஸ் படேல் (14/225) மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement