இந்திய அணியில் இருந்து நீக்கப்படவுள்ள சீனியர் வீரர். அவர் இனிமே வேணாம் – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

BCCI
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என இரண்டும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த இரண்டு தொடரையுமே இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி இந்த வார இறுதியில் தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான இந்திய அணியும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒரு நாள் கிரிக்கட்டில் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

அதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மாற்றங்கள் இருக்கும் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான இசாந்த் சர்மா இதுவரை 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை பவீழ்த்தி இருந்தாலும் கடந்த பல தொடர்களாகவே அவரால் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார்.

ishanth 1

அதுமட்டுமின்றி அவர் அனுபவ வீரர் என்பதனால் வாய்ப்பைப் பெறும் வேளையில் சிறப்பாக செயல்படும் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் ஏற்கனவே சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் வாய்ப்பிற்காக காத்திருக்கும் வேளையில் இசாந்த் சர்மாவின் இடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பறிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் சாம்பியன்ஸ் நியூசிலாந்தா இருக்கலாம். ஆனா பாயிண்ட்ஸ் டேபுள்ள எப்போவுமே நாமதான் – விவரம் இதோ

மேலும் தற்போது முகமத் சிராஜ் அசத்தலான பந்து வீச்சை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால் கட்டாயம் தென் ஆப்ரிக்க தொடரில் இஷாந்த் சர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிராஜ் அணியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. அதேபோன்று ரஹானேவின் இடமும் தற்போது இக்கட்டான சூழலில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement