டெஸ்ட் சாம்பியன்ஸ் நியூசிலாந்தா இருக்கலாம். ஆனா பாயிண்ட்ஸ் டேபுள்ள எப்போவுமே நாமதான் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெற்ற வேளையில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து கடந்த மூன்றாம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இந்த தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND

- Advertisement -

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டு இந்த தொடர் வந்துள்ளதால் தற்போது இந்திய அணி தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரிலும் தோற்கவில்லை என்ற சாதனையையும் இந்திய அணி தக்கவைத்துள்ளது.

இதுவரை கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து விளையாடியுள்ள எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்கவில்லை. 2012-ல் இருந்து இந்திய மண்ணில் இதுவரை விளையாடிய 14 தொடரையும் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது என்பது இதில் கூடுதல் சிறப்பம்சம்.

rank

ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தாலும் தற்போது வெளியான ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அதன்படி ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 121 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி படைத்துள்ள வரலாற்று சாதனை – விவரம் இதோ

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் முறையே 3, 4, 5 ஆகிய இடங்களில் உள்ளன. கடைசியாக இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அடைத்த தோல்விக்கு பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement