வீடியோ : மைதானத்தில் சண்டை போட்ட அஷ்வின் -சவூதி. மோர்கனும் வாய் தகராறு – என்ன நடந்தது ?

ashwin
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 127 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது. இதன் காரணமாக 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி ஒரு திரில்லிங்கான வெற்றியைப் பெற்றது.

kkrvsdc

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் துவக்கம் சிறப்பாக அமைந்தும் மிடில் ஆர்டரில் ரன் குவிக்க திணறினர். துவக்க வீரர்களான ஸ்மித் 39 ரன்களும், தவான் 24 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க அதன்பின்னர் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மட்டுமே 39 ரன்களை குவித்தார். அவரை தவிர மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்களைக் கூட தாண்டவில்லை.

இந்நிலையில் இந்த போட்டியில் அஸ்வின் 19வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அஸ்வின் மற்றும் சவூதி ஆகியோர் கடுமையான வார்த்தை தகராறில் ஈடுபட்டனர். அஸ்வின் ஆட்டம் இழந்ததும் அவரை நோக்கி டிம் சவூதி ஏதோ தகாத வார்த்தைகளால் கூறியதாக தெரிகிறது. அதனால் ஆவேசமான அஸ்வின் அவரிடம் பேசிக் கொண்டே சென்றார்.

morgan

பின்னர் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனும் அஸ்வினை நோக்கி ஏதோ பேசியபடி வந்தார். இதனால் பொறுமை இழந்த அஸ்வின் அவர்கள் இருவரையும் நோக்கி சரமாரியாக வார்த்தைகளை உதித்தார். உடனே கொல்கத்தா அணியில் இருக்கும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அஸ்வினை சமாதானம் செய்து பின்னர் பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார்.

- Advertisement -

அஸ்வின் மற்றும் சவுதி ஆகியோரது இந்த சண்டை மைதானத்தில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் இதுதொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : வீடியோ : ஜஸ்ட் மிஸ் இல்லனா நாக் அவுட் தான். தினேஷ் கார்த்திக்கை பேட்டால் அடிக்க சென்ற – ரிஷப் பண்ட்

அது மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சின் போது இயான் மோர்கன் விக்கெட்டை எடுத்த அஷ்வின் அவரை பழிதீர்க்கும் விதமாக அந்த விக்கெட்டை எடுத்தவுடன் மிகவும் ஆவேசமாக விக்கெட்டை கொண்டாடி இயான் மோர்கன் வழி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement