வீடியோ : ஜஸ்ட் மிஸ் இல்லனா நாக் அவுட் தான். தினேஷ் கார்த்திக்கை பேட்டால் அடிக்க சென்ற – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 41-ஆவது லீக் போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. ஏற்கனவே பிளேஆப் சுற்றுக்கு டெல்லி அணி முன்னேறிவிட்டது. ஆனால் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்த கொல்கத்தா இக்கட்டான சூழ்நிலையில் இந்த போட்டியில் மோதியது. முடிவில் கொல்கத்தா அணி இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

kkrvsdc

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி கொல்கத்தா அணி பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சு காரணமாக எந்த ஒரு கட்டத்திலும் ரன் குவிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தனர். அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தலா 39 ரன்கள் குவித்தனர். மேலும் இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக 14 பவுண்டரிகள் அடிக்கப்பட்டதே தவிர ஒரே ஒரு சிக்ஸர் கூட செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி ஆனது 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா 36 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

rana

இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி அணியின் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தற்செயலாக தினேஷ் கார்த்திக்கை பேட்டால் தாக்க சென்ற சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி போட்டியின் 17வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச அப்போது வழக்கம்போல தினேஷ் கார்த்திக் பின்னால் நின்று அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் அடுத்த பந்தை ரிஷப் பண்ட் அதிரடியாக அடிக்க முயன்றார்.

- Advertisement -

ஆனால் பந்து அவரது பேட்டில் உட்புறமாக பட்டு ஸ்டம்பை நோக்கி சென்றது. உடனே பந்து ஸ்டம்பில் படக்கூடாது என்று பேட்டை சுழற்றினார். மேலும் தினேஷ் கார்த்திக் உள்ளே வருவதை பண்ட் சற்றும் எதிர்பார்கவில்லை.

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் டீம்ல இனிமே வார்னர் விளையாட வாய்ப்பில்லை – இர்பான் பதான் இப்படி கூற காரணம் என்ன ?

ஆனாலும் தற்செயலாக பேட்டை முழுவதுமாக சுழற்றி முடித்தார். அப்போது அதனை கண்ட கார்த்திக் அதை சுதாரித்து பின்னால் விழுந்து தப்பித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement