அணில் கும்ப்ளேவையே பின்னுக்கு தள்ளி தமிழக வீரர் அஷ்வின் சாதனை – விவரம் இதோ

Marnus Labuschange Ravichandran Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நாக்பூர் மைதானத்தில் பிப்ரவரி 9-ஆம் தேதி துவங்கியது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக இந்த முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அஷ்வின் இந்த போட்டியில் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்தும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 450-வது விக்கெட்டை பதிவு செய்தார்.

Ashwin

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களையும், 450 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் முதல் ஆசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் அணில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : IND vs AUS : ஆஸ்திரேலியாவின் பிட்ச் குற்றசாட்டை 2வது நாளில் 3வது முறையாக பொய்யாக்கிய இந்தியா – வலுவான நிலை

அணில் கும்ப்ளே தனது 93-ஆவது போட்டியில் தான் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் அஷ்வின் தற்போது 89 போட்டியிலே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரராக இருக்கும் வேளையில் தற்போது அஸ்வின் 450 விக்கெட்டுகளை கடந்து அவரை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement