அதுக்காக தவான் பாய்க்கு நன்றி சொல்றேன்.. குஜராத் வெற்றியை பறித்த அசுடோஸ் சர்மா பேட்டி

Ashutosh Sharma
- Advertisement -

அகமதாபாத் மைதானத்தில் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற்ற ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 89*, சாய் சுதர்சன் 33, ராகுல் திவாட்டியா 23* ரன்கள் எடுத்த உதவியுடன் 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 1, ஜானி பேர்ஸ்டோ 22, பிரப்சிம்ரன் சிங் 35, சாம் கரண் 5, சிக்கந்தர் ராசா 15, ஜிதேஷ் சர்மா 16 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 70/4 என சரிந்த பஞ்சாப்புக்கு மிடில் ஆர்டரில் அட்டகாசமாக விளையாடிய சசாங் சிங் வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

இம்பேக்ட் வீரர்:
அப்போதும் கடைசி 27 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது திடீரென இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுடோஸ் சர்மா 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்டு முக்கியமான 31 (17) ரன்கள் எடுத்து குஜராத்தின் வெற்றியை பறித்தார் என்றே சொல்லலாம். ஏனெனில் எதிர்புறம் அதை பயன்படுத்திய சசாங் சிங் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61* (29) ரன்கள் குவித்து 19.5 ஓவரில் பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தார்.

அதனால் குஜராத் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் நம்மை நம்பி வாய்ப்பு ஷிகர் தவான் மற்றும் பஞ்சாப் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அசுடோஸ் சர்மா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்த தவான் பாய் மற்றும் அணிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்”

- Advertisement -

“என்னுடைய செயல்பாடுகள் நல்ல உணர்வை கொடுக்கிறது. அதை விட முக்கியமாக அணி வெற்றி பெற்றதால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். தவான் பாஜி என்னை அதிகமாக நம்பினார். நான் சாதாரணமாக இருந்து என்னால் இதை செய்ய முடியும் என்று நம்பினேன். அதே போல் என் மீது நம்பிக்கை வைத்த சஞ்சய் பங்காருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்”

இதையும் படிங்க: ஹைதராபாத் அணியில் கண்ட கனவு.. பஞ்சாப்பில் நிறைவேற காரணம் இதான்.. ஆட்டநாயகன் சசாங் பேட்டி

“அவர் எனக்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். எனவே என்னால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் நான் சாதாரணமாக விளையாடினேன். ஏனெனில் ஏற்கனவே என்னுடைய சொந்த ஊர் அணிக்காக போட்டிகளை நான் வென்றுள்ளேன். எங்களுடைய உள்ளூர் அணியில் அமைய் கௌரஸ்யா சாருடன் பயிற்சிகள் செய்தேன். அவர் தான் உனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நீயும் ஹீரோவாக வருவாய் என்று என்னிடம் சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement