பும்ராவுக்கு எதிரா ஸ்வீப் அடிப்பது கனவு.. என்னோட பேட்டிங்க்கு காரணம் அவர் தான்.. அசுடோஸ் பேட்டி

Asutosh sharma 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த 33வது போட்டியில் மும்பையிடம் 9 ரன்கள் வித்யாசத்தில் பஞ்சாப் தோல்வியை சந்தித்தது. முல்லான்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை ரோகித் சர்மா 36, சூரியகுமார் யாதவ் 78 ரன்கள் எடுத்த உதவியுடன் 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் சாம் கரண் 6, பிரப்சிம்ரன் சிங் 0, ரிலீ ரோசவ் 1, லிவிங்ஸ்டன் 1, பாட்டியா 13, ஜிதேஷ் சர்மா 9 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 77/6 என தடுமாறிய பஞ்சாப் தோல்வியின் பிடியில் சிக்கிய போது சசாங் சிங் – அசுடோஸ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து மீண்டும் வெற்றிக்கு போராடினர்.

- Advertisement -

பும்ராவுக்கு எதிராக:
இருப்பினும் அதில் 41 (25) ரன்கள் எடுத்த போது சசாங் சிங் பும்ரா வேகத்தில் அவுட்டானார். ஆனால் எதிர்ப்புறம் அடங்க மறுத்த 25 வயது இளம் வீரர் அசுடோஸ் சர்மா அதே பும்ராவுக்கு எதிராக 12வது ஓவரின் 4வது பந்தில் ஸ்வீப் ஷாட்டால் அசால்டாக சிக்சரை பறக்க விட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதே வேகத்தில் தொடர்ந்து அசத்திய அவர் 2 பவுண்டரி 7 சிக்சருடன் 61 (28) ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்.

அதனால் பஞ்சாப்பை மடக்கிய மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி, பும்ரா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்நிலையில் பும்ரா போன்ற தரமான பவுலருக்கு எதிராக ஸ்வீப் அடிக்க வேண்டும் என்பது நம்முடைய நீண்ட நாள் கனவு எனத் தெரிவிக்கும் அசுடோஸ் சர்மா தம்முடைய சிறப்பான பேட்டிங்க்கு பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீ காட்டுத்தனமாக அடிப்பவன் கிடையாது. உன்னால் சரியான ஷாட்டுகளை அடிக்க முடியும் என்பதால் அதில் கவனம் செலுத்து என்று சஞ்சய் சார் என்னிடம் சொன்னார். அந்த சிறிய வார்த்தை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் அதையே பின்பற்றி வருகிறேன். நான் அதிரடியான ஹிட்டர் கிடையாது. வீட்டில் என்னுடைய பயிற்சியாளர் அமித் குரசியாவுடன் சேர்ந்து பயிற்சி செய்வேன்”

இதையும் படிங்க: மும்பைக்கு சாதகமா எவ்வளவு தீர்ப்பு கொடுப்பீங்க.. அம்பயரிங் பேனலில் இந்த மாற்றத்தை செய்ங்க.. டாம் மூடி

“அவரும் களத்தில் நீண்ட நேரம் இருக்கும் வரை உனது அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். ஆம் 2 போட்டிகளில் நான் ஃபினிஷிங் செய்யவில்லை. ஆனால் அது தான் கிரிக்கெட். அதில் நீங்கள் தொடர்ந்து உங்களுடைய முன்னேற வேண்டும். பும்ராவுக்கு எதிராக ஸ்வீப் அடிப்பது என்னுடைய கனவாகும். அதற்காக நான் பயிற்சிகளை செய்தேன். தற்போது அது உலகின் சிறந்த பவுலருக்கு எதிராக வந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement