சூரியகுமார் யாதவால் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் இருக்கு. மறந்துடாதீங்க – எச்சரித்த ஆஷிஷ் நெஹ்ரா

Ashish-Nehra-and-SKY
- Advertisement -

இந்திய அணியில் நீண்ட நாட்களாகவே நான்காவது இடத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் குறித்த கேள்வி தொடர்ந்து இருந்து வந்தது. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை முன்னர் வரை ஏகப்பட்ட வீரர்கள் அந்த இடத்தில் விளையாட வைக்கப்பட்டனர். குறிப்பாக ரஹானேவை, தொடர்ந்து மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் ஐயர் என பல்வேறு வீரர்கள் அந்த இடத்தில் பரிசோதிக்கப்பட்டாலும் யாரும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் தாக்குப் பிடித்து அந்த இடத்தை சரியாக பயன்படுத்தி வந்தார். ஆனால் அவரும் கடந்த ஓராண்டாக ஷார்ட் பால் பிரச்சனையால் தவித்து வருகிறார்.

Suryakumar-Yadav

- Advertisement -

ஆனால் கடந்த ஓராண்டாகவே சூரியகுமார் யாதவ் வந்த பிறகு அந்தப் பிரச்சனை தீர்ந்திருப்பதாக இந்திய அணியின் நிர்வாகம் நினைக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான சூர்யா குமார் யாதவ் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என நான்காவது இடத்தில் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டு சர்வதேச அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அதோடு ஐ.சி.சி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலிலும் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்த அவர் அதன் பின்னர் ஆசிய கோப்பை தொடர், மேற்கிந்திய தீவுகள் தொடர், ஆஸ்திரேலியா தொடர் என அனைத்து தொடர்களிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் கூட முக்கியமான வேளையில் களமிறங்கி 50 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்.

Suryakumar Yadav vs RSA

இப்படி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் மீது அனைவரும் நம்பிக்கை வைத்து வரும் வேளையில் சூரியகுமார் யாதவியின் பேட்டிங் அணுகுமுறை முற்றிலுமாக அதிரடியாக இருப்பதனால் எந்த நேரத்திலும் இந்திய அணிக்கு அது ஆபத்தை தரலாம் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவியின் ஆட்டம் மிகச் சிறப்பாக உள்ளது. அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அவரது ஆட்டத்திற்கு நானும் ஒரு ரசிகன் தான்.

- Advertisement -

ஆனாலும் சூரியகுமார் யாதவின் பேட்டிங் அணுகுமுறை என்பது இருமுனை கத்தி போன்றது ஒரு சில போட்டிகளில் அவர் நன்றாக விளையாடிய விட்டால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆனால் அவர் ஒரு சில போட்டிகளில் முன்கூட்டியே ஆட்டம் இழந்தால் அது இந்திய அணிக்கு இன்னும் மோசமான பின்னடைவை தரலாம். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆட்டம் இழந்த பிறகு சூரியகுமார் யாதவ் வந்தது முதல் அடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதையும் படிங்க : ஒருவழியா இந்தியாவுக்கு அடுத்த ஜஹீர் கான் கிடைச்சுட்டாரு – இளம் பவுலரின் திறமையை பாராட்டும் கம்ரான் அக்மல்

அவரது இந்த அணுகுமுறையால் அவர் எளிதாக விக்கெட்டை இழந்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. தென்னாபிரிக்க அணியினர் பந்துவீச்சில் சொதப்பியதால் அவருக்கு அந்த ஆட்டம் சாதகமாக அமைந்துவிட்டது. ஒருவேளை அவர் விக்கெட்டை இழந்து இருந்தால் அது இந்திய அணிக்கு பாதிப்பை தந்திருக்கும். எனவே சூரியகுமார் யாதவின் இந்த அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணிக்கு எந்த அளவிற்கு சாதகம் உள்ளதோ, அதே அளவிற்கு அது பாதகமாகவும் மாற வாய்ப்பு உள்ளது என ஆஷிஷ் நெஹ்ரா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Advertisement