- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுப்மன் கில்லின் பேட்டிங் பார்ம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை.. காரணத்தை கூறிய – ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்ட பிறகு சஞ்சு சாம்சன் விளையாடி வந்த துவக்க வீரருக்கான இடம் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவர் சர்வதேச டி20 போட்டிகளில் மிகவும் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த 20 டி20 போட்டிகளாக அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சுப்மன் கில்லின் பார்ம் குறித்து எங்களுக்கு கவலையில்லை : ஆஷிஷ் நெஹ்ரா

சர்வதேச டி20 போட்டிகள் பொறுத்தவரை பல்வேறு திறமையான வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் துணை கேப்டன் பதவியால் மட்டுமே சுப்மன் கில் அந்த இடத்தில் நீடிக்கிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் கூட 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் சுப்மன் கில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதனால் அவரது பேட்டிங் பார்ம் மீதான விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசியுள்ள குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா எங்களுக்கு சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

ஐபிஎல் தொடரானது அடுத்த மூன்று வாரத்தில் வருகிறது என்றாலும் நாங்கள் சுப்மன் கில்லின் பார்ம் குறித்து கவலைப்பட மாட்டோம். ஏனெனில் தற்போது தான் சுப்மன் கில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த இரண்டு போட்டிகளை வைத்து அவரை குற்றம் சொல்வது நியாயம் கிடையாது. அவரது ஆட்டம் நிச்சயம் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

ஒரு போட்டியில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்று துவக்க வீரருக்கான ஜோடியை மாற்றலாம். ஆனால் சுப்மன் கில் போன்ற வீரர்கள் மீண்டும் மிகச் சிறப்பாக கம்பேக் கொடுக்கக் கூடியவர்கள். அதேபோன்று இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் மிக முக்கியமான வீரராக இடம் பெறுவார்.

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் விராட் கோலியின் சம்பள ஒப்பந்தம் எந்த கிரேடில் இருக்கும்? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

அவரிடம் இருக்கும் திறமைக்கு நிச்சயம் அவர் ஒன்றாவது முதல் ஏழாவது வரை எந்த நம்பரில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்யலாம். இந்திய அணிக்காக மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடும் அவர் மீது எங்களுக்கும் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நிச்சயம் வாஷிங்டன் சுந்தரை இம்முறை ஒரு முழு வீரராக நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் ஆஷிஷ் நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -