விராட் கோலி மற்றும் விராட் கோலியின் சம்பள ஒப்பந்தம் எந்த கிரேடில் இருக்கும்? – பி.சி.சி.ஐ எடுத்துள்ள முடிவு

RoKo and BCCI
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் வீரர்களின் தகுதிக்கேற்ப சம்பள ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த மத்திய ஒப்பந்த ஊதிய பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த சம்பள பட்டியல் எப்போது வெளியாகும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது சம்பளம் குறைப்பு :

இந்நிலையில் இந்த புதிய சம்பள ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு சம்பள கிரேடினை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

- Advertisement -

அதனால் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக ஏ+ கிரேடு பிரிவில் இருந்து அவர்களை ஏ கிரேடுக்கு குறைக்க பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 கோடி ரூபாய் வரை அவர்களது சம்பளம் குறைய வாய்ப்புள்ளது.

அதே வேளையில் மற்றொரு நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதால் அவர் ஏ ப்ளஸ் பிரிவிலேயே நீடிப்பார். அவரது சம்பள ஒப்பந்த பட்டியலில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணிக்காக ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவர் மட்டுமே 2024-2025 சம்பள ஒப்பந்த பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இடம் பெற்றிருந்த வேளையில் இந்த ஆண்டு கேப்டன் சுப்மன் கில் அந்த பட்டியலில் புதியதாக இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான முடிவுகளை பி.சி.சி.ஐ உறுதி செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அக்சர் படேலுக்கு அந்த பேட்டிங் பொசிஷன் சரியானது கிடையாது.. இது ரொம்ப தவறு – சஞ்சய் பாங்கர் கருத்து

அப்படி ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஒப்பந்த பட்டியலில் ஒரு கிரேடு குறைக்கப்பட்டால் அவர்கள் ஆண்டு ஊதியமாக 5 கோடி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவு இன்னும் சில நாடுகளில் உறுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement