தவறுதலா அப்படி ஒரு பந்தை போட்டா கூட ரோஹித் சிக்ஸ் அடிச்சிருவாரு – ஆஷிஷ் நெஹ்ரா வெளிப்படை

Nehra
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே செப்டம்பர் 23-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாக 8 ஓவர்கள் மட்டுமே நடைபெற்றது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் குவித்தது. பின்னர் 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்தியானது 7.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Dinesh Karthik

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றியை பெற முக்கிய காரணமாக இந்திய அணியின் துவக்கம் ஆட்டக்காரரும், கேப்டன்மான ரோகித் சர்மா முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஏனெனில் 20 பந்துகளை சந்தித்த அவர் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 46 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரோஹித் சர்மா விளையாடிய விதம் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ரா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா இந்த ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தினார். பந்துவீச்சாளர் தரமான பந்தினை வீசினாலும் தனது திறமை மூலம் அதனை ரோகித் சர்மா சிக்சராக மாற்றினார். ரோகித் சர்மாவிற்கு எதிராக பவுலர்கள் ஷார்ட் பால்களை பயன்படுத்த முயற்சி செய்ய மாட்டார்கள். ஒருவேளை தவறி ஷார்ட் பால் அவருக்கு எதிராக வீசப்பட்டால் நிச்சயம் ரோஹித் சர்மா சிக்சர் அடித்து விடுவார். அந்த வகையில் ரோகித் சர்மா மூன்று சிக்ஸர்களை இந்த போட்டியில் பறக்க விட்டார்.

Rohit Sharma IND vs AUS

பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே பந்துவீசினாலும் அதனை சமாளித்து ரோஹித் சிக்ஸர்களை அடித்து விடுகிறார். அதே வேளையில் அவருக்கு எதிராக சில தவறான பந்துகளோ அல்லது ஷார்ட் பாலோ வீசப்பட்டால் நிச்சயம் அதனையும் அவர் சிக்ஸராக மாற்றும் தன்மை உடையவர் என நெஹ்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மா எப்பொழுதுமே கண்ணை மூடிக்கொண்டு சுற்றும் ஒரு வீரர் கிடையாது.

- Advertisement -

சரியான கிரிக்கெட்டிங் ஷாட்களை மிகச் சிறப்பாக அடிப்பதில் அவர் வல்லவர். அதோடு அவருடைய இன்னிங்சை எவ்வாறு கட்டமைக்க வேண்டும், எந்த பவுலருக்கு எதிராக டார்கெட் செய்து அடிக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருப்பார். அதேபோன்று போட்டியின் எந்த நேரத்திலும் ஷார்ட் பாலுக்காக காத்திருக்கும் அவர் ஷார்ட் பால் கிடைத்தால் அதற்கு தயாராக இருப்பார் என்றும் நெஹ்ரா பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IND vs AUS : இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணத்தில் சமநிலையில் உள்ள வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி செப்டம்பர் 25-ஆம் தேதி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement