ரிங்கு சிங் ஆடுற ஆட்டம் நல்லாதான் இருக்கு.. அதே ஆட்டத்தால அவருக்கு பிரச்சனையும் இருக்கு – ஆஷிஷ் நெஹ்ரா கருத்து

Nehra
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நேற்று பெங்களூரில் நடைபெற்ற கடைசி போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரில் ஏற்கனவே மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இந்திய அணியானது நேற்றைய கடைசி போட்டியிலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றதோடு இந்த தொடரையும் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்ததை அடுத்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு பிசிசிஐ சீனியர் வீரர்களுக்கு ஓய்வளித்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணியையே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட அறிவித்தது.

- Advertisement -

இந்த தொடரில் பினிஷர் ரோலில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் அண்மையில் இந்திய அணியில் இடம் பிடித்து சீனாவில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த எல்லா வாய்ப்புகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாலும் அவரது பேட்டிங் மிகச் சிறப்பாக உள்ளதாலும் அவரே தோனிக்கு அடுத்து இந்திய அணியின் பினிஷராக பார்க்கப்படுகிறார்.

அதோடு 2024-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலக கோப்பையில் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ரிங்கு சிங்கின் சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் : ரிங்கு சிங் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்படக்கூடிய ஒரு வீரர் தான். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை இன்னும் உலகக்கோப்பைக்கு சில மாதங்களே எஞ்சியுள்ளன. எனவே நிச்சயம் அவரது இடத்தை பிடிக்க கடும் போராட்டத்தை சந்திக்க இருக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் அவர் தனது இடத்திற்காக போட்டி போட வேண்டிய வீரர்கள் பலர் வரிசையில் உள்ளனர். குறிப்பாக ஹார்டிக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முதன் அணியில் இருக்கும் வேளையில் ஜித்தேஷ் சர்மா, திலக் வர்மா போன்ற வீரர்களும் இந்திய அணிக்கான வாய்ப்பில் வரிசையில் நிற்கின்றனர். இவர்களை எல்லாம் மீறி அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : உங்களை ரொம்ப பிடிக்கும்.. வேகத்தை அதிகரிக்க அதை மட்டும் செய்ங்க.. பும்ராவுக்கு நீரஜ் சோப்ரா அட்வைஸ்

இப்போது அவர் நன்றாகத்தான் விளையாடி வருகிறார். ஆனாலும் அவரது ஆட்டத்தை பார்க்கும் நாம் அவர் மீது அழுத்தத்தை கொடுக்கக் கூடாது. ஒருவேளை நாம் அவரை மிகச் சிறந்த வீரர் என்று பாராட்டி அவருக்கு அழுத்தத்தை கொடுத்தால் அவர் சரிவை சந்திக்கும் போது அதிலிருந்து மீண்டு வருவது கடினமாக இருக்கும். எனவே அவரது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்த நாம் அவருக்கு சுதந்திரத்தை வழங்க வேண்டும். அப்படி செய்தால் நிச்சயம் அவர் மிகப்பெரிய வீரராக மாறுவார் என ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement