உங்களை ரொம்ப பிடிக்கும்.. வேகத்தை அதிகரிக்க அதை மட்டும் செய்ங்க.. பும்ராவுக்கு நீரஜ் சோப்ரா அட்வைஸ்

Neeraj Chopra 2
- Advertisement -

நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை பவுலராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் 2016இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்தினார். இருப்பினும் இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்ற கருத்துக்கள் எழுந்தன.

ஆனால் 2018 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி அபாரமாக செயல்பட்டு அந்த கருத்துக்களை உடைத்த பும்ரா குறுகிய காலத்திலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக உருவெடுத்த அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

ஒலிம்பிக் ஹீரோவின் அட்வைஸ்:
அதிலிருந்து இரண்டு முறை குணமடைந்து விளையாடிய அவர் மீண்டும் காயமடைந்து வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலகக் கோப்பை மட்டுமல்லாமல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் ஒரு வழியாக குணமடைந்து 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் 2023 உலகக் கோப்பையிலும் ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் பும்ரா குறைந்த தூரத்திற்கு பதிலாக சற்று அதிக தொலைவிலிருந்து ஓடி வந்து பந்தை வீசினால் காயங்களை தவிர்த்து இன்னும் சற்று அதிகமான வேகத்தில் வீச முடியும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி ஏறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் 2023 உலகக்கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியா உறுதியான மனநிலையுடன் செயல்பட்டதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஜஸ்பிரித் பும்ராவை எனக்கு பிடிக்கும். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. இருப்பினும் வேகத்தை அதிகரிக்க அவர் தன்னுடைய ரன் அப்பை சற்று அதிகரிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஈட்டி எறிதல் வீரர்களாக நாங்கள் எப்போதும் எப்படி பவுலர்கள் பந்தை அதிக வேகத்தில் வீசுகிறார்கள் என்பதை பற்றி விவாதிப்போம். சற்று தூரத்திலிருந்து ஓடி வந்தால் அவர்களால் அதிக வேகத்தை உருவாக்க முடிகிறது. பும்ராவின் ஸ்டைலை நான் விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இந்தியாவை தோற்கடிச்சா போதும்.. அதை கன்ஃபார்ம் பண்ணிடுவேன்.. மெக்கல்லம் பேட்டி

“ஃபைனல் போட்டியில் விராட் கோலி மற்றும் ராகுல் விளையாடிய பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் பேட்டிங் எளிதாக மாறியது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய நமக்கு அந்த நாள் சரியாக அமையவில்லை. ஏதோ ஒரு வகையில் ஆஸ்திரேலியா மனதளவில் அதிக வலுவாக விளையாட துவங்கினர். குறிப்பாக பந்து வீச்சு துறையில் அவர்கள் வலுவான மனநிலையுடன் செயல்பட்டனர். கடைசியில் வெற்றியை அவர்கள் மொத்தமாக மாற்றி விட்டனர்” என்று கூறினார்.

Advertisement