- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை தொடரில் இவர் அதிசயங்களை நிகழ்த்துவார் – சி.எஸ்.கே வீரரை புகழ்ந்த ஆஷிஷ் நெஹ்ரா

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த 14-ஆவது ஐ.பி.எல் தொடர் முடிவடைந்தவுடன் டி20 உலகக் கோப்பை தொடரானது அங்கு நடைபெற உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் சுழற்பந்து வீச்சு அதிகளவு எடுபடும் என்பதனால் இந்திய அணியில் ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி மற்றும் அஷ்வின் என அதிக சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி செல்கிறது.

அதுமட்டுமின்றி 15 பேர் கொண்ட அணி தவிர ரிசர்வ் வீரர்களாக ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் இந்த தொடரில் பங்கேற்கின்றனர். மேலும் தோனியும் இந்திய அணியின் ஆலோசகராக பங்கேற்க இருப்பதால் இந்த தொடரின் மீது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த ஒரு வீரர் அதிசயங்களை நிகழ்த்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெக்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : சென்னை அணியின் முன்னணி வீரர் ஜடேஜா இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிசயங்களை நிகழ்த்துவார். ஏனெனில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்டுவரும் ஜடேஜா ஒரு போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து அசத்தினார். அதுமட்டுமின்றி அவர் 10 போட்டிகளில் 179 ரன்களை பின்வரிசையில் இறங்கி அடித்துள்ளார்.

அவரது பேட்டிங் இந்திய அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும். அது மட்டுமின்றி பந்து வீச்சிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமின்றி மிடில் ஓவர்களில் ரன் குவிப்பையும் கட்டுப்படுத்தி அசத்தலாக பந்துவீசி வருகிறார் என்று நெஹ்ரா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த இரண்டு வருடங்களாகவே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜடேஜா பினிஷராகவும் செயல்பட தகுதியானவர்.

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா பார்க்கப்பட்டாலும் நிச்சயம் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் கோலி மற்றும் ஆலோசகர் தோனி ஆகியோரது முடிவின்படி பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்பட்டால் ஜடேஜா நிச்சயம் அந்த அணியில் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – கைரன் பொல்லார்டு

நெஹ்ரா கூறியதும் ஒருவிதத்தில் உண்மைதான் முதலில் பேட்டிங் செய்யும்போது அதிரடியாக விளையாடும் ஜடேஜா போட்டியை முடித்து கொடுப்பதிலும் தற்போது சிறப்பானவராக மாறியுள்ளார் அண்மையில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது வெற்றிக்கு 2 ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட போது 19வது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை அடித்த ஜடேஜா 22 ரன்கள் ஒரே ஓவரில் குவித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை உறுதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by