டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் படைக்காத மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்திய – கைரன் பொல்லார்டு

Pollard-3
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டி நேற்று இரவு அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் வெற்றிப்பெற்றே ஆகவேண்டிய காட்டாயத்தில் இரு அணிகளும் விளையாடியதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு இருந்தது.

mivspbks

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 135 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய மும்பை அணி துவக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தாலும் திவாரி மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் 19வது ஓவரின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணிக்காக பங்கேற்று விளையாடிய மேற்கிந்திய அணியை சேர்ந்த முன்னணி வீரரான பொல்லார்டு டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அந்த சாதனையை நிலையில் : நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது தான் வீசிய முதல் ஓவரிலேயே கெயில் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி அளித்தார் பொல்லார்டு.

pollard

பிட்ச் ஸ்லோவாக இருந்ததால் பந்துவீச வந்த பொல்லார்டு கெயில் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமில்லாமல் கே.எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். நேற்றைய போட்டிக்கு முன்னர் 298 விக்கெட்டுகள் எடுத்திருந்த பொல்லார்டு நேற்று கெயில் மற்றும் ராகுல் ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 300 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும் – பி.சி.சி.ஐ அறிவிப்பு (காரணம் என்ன ?)

அதுமட்டுமின்றி ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ள பொல்லார்டு டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் நபராக 10 ஆயிரம் ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement