ஐ.பி.எல் தொடரின் கடைசி 2 லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறும் – பி.சி.சி.ஐ அறிவிப்பு (காரணம் என்ன ?)

IPL-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது முதற்கட்டமாக 29 போட்டிகள் முடிவடைந்த வேளையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த தொடரின் எஞ்சியுள்ள 31 ஆட்டங்களையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி தற்போது இரண்டாம் பாதி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 42 போட்டிகள் சிறப்பாக முடிவடைந்துள்ளன.

IPL

- Advertisement -

இவ்வேளையில் மொத்தமுள்ள 56 லீக் போட்டிகள் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அதில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் கடைசி நாளில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த இரண்டு லீக் போட்டிகளில் முதலாவதாக அபுதாபி மைதானத்தில் 3.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதயிருந்தன.

அதேபோன்று துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதும் என்று ஏற்கனவே அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ இந்த அட்டவணையில் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது.

rcbvsdc

அதன்படி கடைசி இரண்டு லீக் போட்டிகள் ஒரே நாளில் நடைபெற்றாலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறாது என்றும் அந்த இரண்டு போட்டியிலும் இந்திய நேரப்படி சரியாக இரவு 7.30 மணிக்கு ஒரே நேரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

- Advertisement -

mivssrh

ஒருவேளை இரண்டு போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கு ரன்ரேட் அடிப்படையில் பிளேஆப் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கணித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் மாற்றப்பட்டிருக்கலாம். அல்லது அக்டோபர் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதனால் பிற்பகலில் நடைபெறும் ஆட்டத்தை ரசிகர்கள் பலர் பார்க்க முடியாது என்கிற காரணத்தினால் இரவு ஏழரை மணிக்கு ரசிகர்களுக்கு சரியானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அப்பாடா ஒருவழியா ஜெயிச்சாச்சி. பஞ்சாப் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு ரோஹித் – பேசியது என்ன ?

ஆனால் நிச்சயம் அந்த கடைசி இரண்டு போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற காரணம் யாதெனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற ரன் ரேட் நிச்சயம் உதவும் என்பதால் அதனை அணிகள் கணித்து விளையாடக் கூடாது என்பதற்காகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது.

Advertisement