- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் போட்டிக்கு முன்பாகவே விராட், ரோஹித் வெச்சு கம்பீர் சிறப்பான விஷயம் பண்ணிட்டாரு.. நெஹ்ரா பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வந்ததும் கௌதம் கம்பீர் சில அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக ஹர்திக் பாண்டியா அனைத்து தொடர்களிலும் விளையாடுவதில்லை.

எனவே 2026 டி20 உலகக் கோப்பைக்கு நிலையான கேப்டனை வளர்க்க நினைக்கும் கம்பீர் அவரை கழற்றி விட்டு சூரியகுமாரை புதிய கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல விரைவில் துவங்கும் இலங்கை ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவெடுத்திருந்தனர். ஆனால் பயிற்சியாளராக வந்ததும் கௌதம் கம்பீர் அவர்களை இலங்கைத் தொடரில் விளையாட வைக்க வலுக்கட்டாயமாக தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

நெஹ்ரா பாராட்டு:
அத்துடன் ஃபிட்டாக தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கம்பீர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பயிற்சியாளராக வந்ததும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை இலங்கைத் ஒருநாள் தொடரில் விளையாட வைக்கும் சிறப்பான முடிவை கௌதம் கம்பீர் எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.

ஏனெனில் விராட் மற்றும் ரோஹித் ஆகியோருடன் இணைந்து விளையாடுவதால் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்பு இளம் வீரர்களுக்கு கிடைக்கும் என்று நெஹ்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக வந்துள்ளார். பயிற்சியாளராக வந்ததும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைப் பற்றி தெரியும் அல்லது தெரியாது என்பதைத் தாண்டி அவர்களுடன் உடைமாற்றும் அறையில் சேர்ந்து செயல்பட கம்பீர விரும்புகிறார்”

- Advertisement -

“கம்பீரின் பரிந்துரையில் விராட் மற்றும் ரோஹித் சர்மா ஒருநாள் தொடரில் விளையாட உள்ளதை நான் விரும்புகிறேன். பொதுவாக உலகக் கோப்பை முடிந்ததும் சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது வழக்கமாகும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா ஏற்கனவே நல்ல தரமான வீரர்களை கொண்டுள்ளது”

இதையும் படிங்க: எல்லாத்தையும் சாதிச்ச உங்க கேரியரில் இது மட்டும் மீதமிருக்கு.. செய்யாம விட்றாதீங்க.. விராட் கோலிக்கு யூனிஸ் கான் கோரிக்கை

“எனவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் எந்தளவுக்கு நேரத்தை செலவிடுகிறார்களோ அந்தளவுக்கு இளம் வீரர்கள் தங்களுடைய ஆட்டத்தில் முன்னேற்றத்தை சந்திப்பார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி துவங்குகிறது. அதன் பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -