CSK vs GT : குஜராத் அணி தோக்க ஆசிஷ் நெஹ்ரா தான் காரணம். விளக்கத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள் – ஒருவேளை இருக்குமோ?

Nehra
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும் இடையேயான நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதன்படி இந்த முக்கியமான இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

Jadeja

- Advertisement -

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது தங்களது சேஸிங்கை துவங்கிய முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி சிலமணி நேரம் தடைபட்டது. பின்னர் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு சி.எஸ்.கே அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்ட பின்னர் சி.எஸ்.கே அணியானது வெகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிவரை வெற்றியை நோக்கியே பயணித்தது. ஆனாலும் இறுதிவரை இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிசமமாகவே இருந்தது. அந்த அளவிற்கு போட்டி கடைசி வரை சுவாரசியமாக சென்றது.

Nehra-1

இந்நிலையில் போட்டியின் கடைசி ஓவரின் போது சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த முக்கியமான கடைசி ஓவரை அனுபவ வேகப்பந்து வீச்சாளரான மோஹித் சர்மா வீசினார். முதல் 4 பந்துகளில் 1 டாட் பால் உட்பட 3 ரன்களை மட்டுமே அவர் விட்டுக்கொடுத்தார். அதனால் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்பதால் குஜராத் அணியின் கையே ஓங்கியிருந்தது.

- Advertisement -

அவ்வேளையில் 5 ஆவது பந்தினை மோஹித் சர்மா வீசுவதற்கு முன்னர் பவுண்டரி லைனில் இருந்த குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவுரை ஏதோ ஒன்றினை கூறி சப்ஸ்ஸிடியூட் வீரர் ஒருவரை கூல்ட்ரிங்க்ஸ் உடன் உள்ளே அனுப்பினார். அவரும் உள்ளே வந்து நெஹ்ரா கூறிய ஆலோசனையை பாண்டியா மற்றும் மோஹித் சர்மா ஆகியோரிடம் கூறினார். அதன் பின்னர் 4 பந்துகளை சரியாக யார்க்கர் வீசிய மோஹித் 5 ஆவது பந்தை லென்த் பந்தாக வீச அந்த பந்தினை ஜடேஜா சிக்சருக்கு விளாசினார்.

இதையும் படிங்க : IPL 2023 : ப்ளீஸ் சீக்கிரம் அவர கழற்றி விடுங்க, 2 மோசமான சாதனையால் மானத்தை வாங்கிய பவுலரை – விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்

பின்னர் கடைசி பந்தினை லெக் சைடில் வைடாக வீச அந்த பந்திலும் ஜடேஜா பவுண்டரி அடித்து சென்னை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் கடைசி ஓவரின் முதல் 4 பந்துகளை சிறப்பாக யார்க்கர் வீசிய மோஹித் சர்மாவை அப்படியே விட்டிருந்தால் மேலும் 2 யார்க்கரை வீசி அவர் வெற்றிபெற்று கொடுத்திருப்பார் என்றும் தேவையில்லாமல் 5 ஆவது பந்திற்கு முன்னதாக ஆலோசனை வழங்குகிறேன் என்ற பெயரில் நெஹ்ரா தான் மோஹித் சர்மாவின் தெளிவான மனநிலையை கலைத்தார் என்றும் நெஹ்ராவை ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement