- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான 3-ஆவது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங் ஏன் விளையாடவில்லை? – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 2 போட்டிகளின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போதைய நிலையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வலுவான நிலையில் உள்ளது.

அர்ஷ்தீப் சிங் விளையாடாதது ஏன்? :

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது ராஜ்கோட் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக திகழும் அர்ஷ்தீப் சிங் இந்த மூன்றாவது போட்டியில் ஏன் விளையாடவில்லை? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அதற்கான விளக்கம் தற்போது கிடைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் அர்ஷ்தீப் சிங் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் ஓய்வின்றி விளையாட வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 3ன்னு நினைப்போம்.. ஷமி இஸ் பேக் 3வது டி20யில் டாஸ் வென்ற சூரியகுமார்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ

ஏனெனில் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரே இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்பதனால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -