- Advertisement -
ஆசிய கோப்பை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பிளேயிங் லெவனுக்குள் வரும் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற நடப்பு 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இந்த தொடரை அட்டகாசமாக துவங்கியுள்ளது. நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியிலேயே பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் ஏற்படவுள்ள மாற்றம் :

அதற்கடுத்து இந்திய அணியானது நாளை மறுதினம் செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் மண்ணில் நடைபெற இருக்கும் இரண்டாவது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்திய அணியில் பரம எதிரியாக பார்க்கப்படும் பாகிஸ்தான் அணியை இந்த போட்டியில் வீழ்த்த வேண்டும் என தற்போது இந்திய வீரர்கள் முழுமூச்சுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியில் ஒரு சில மாற்றங்கள் பிளேயிங் லெவனில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கி இருந்த வேளையில் இந்திய அணி கட்டாயம் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளருடன் செல்ல வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஏனெனில் ஆல்ரவுண்டர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோரை முழுவதுமாக நம்ப முடியாது என்பதனால் முழுநேர வேகப்பந்து வீச்சாளராக ஒருவரை அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற பேச்சு அதிகளவில் இருந்து வருகிறது. இதன் காரணமாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வருவார் என்றும் தெரிகிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் 8-ஆம் இடம் வரை நீடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதனால் ஒரு வீரரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வருவார் என்று தெரிகிறது. தற்போதைய இந்திய அணி அனைத்து துறைகளிலு மிக பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவதால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் எளிதில் வெற்றிபெறும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரசாங்கம் அவங்க வேலையை பாப்பாங்க.. நீங்க உங்க வேலையை சரியா செய்யுங்க.. இந்திய அணிக்கு – கபில்தேவ் அட்வைஸ்

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை மறுதினம் செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -