- Advertisement -
ஆசிய கோப்பை

அப்பாடா ஒரு வழியா அடுத்த போட்டியில் அர்ஷ்தீப் சிங் விளையாடப்போறது கன்பார்ம் – பும்ராவால் ஏற்படவுள்ள மாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய டெஸ்ட் அணியுடன் சென்றிருந்தார். அதன் காரணமாக நிச்சயம் இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெற்று முடிந்த அந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. அப்படி அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அப்போதே பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது.

அடுத்த போட்டியில் இந்திய அணிக்கு திரும்பும் அர்ஷ்தீப் சிங் :

அதனை தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அர்ஷ்தீப் சிங் இடம் பிடித்துள்ளார். டி20 போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முதலிடத்தில் இருக்கும் அவர் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் இருந்து தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்த ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியிலும் சரி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியிலும் சரி அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பும்ரா மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவருக்கு உறுதுணையாக ஹார்டிக் பாண்டியா பந்துவீசி வருகிறார்.

இப்படி டி20 போட்டிகளில் நம்பர் 1 பவுலராக இருக்கும் அர்ஷ்தீப் சிங் விளையாடாதது பலரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் தனிப்பட்ட முறையில் அவருக்கும் அது வருத்தத்தை தந்திருக்கும். இந்நிலையில் தான் அடுத்த ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது உறுதி என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி விட்டதால் கடைசி லீக் போட்டியின் போது அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது. அப்படி பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் போது அவருக்கு மாற்று வீரராக அர்ஷ்தீப் சிங் தான் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் இடம் பிடிப்பார்.

இதையும் படிங்க : ஓமன் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல் – காரணம் என்ன?

அதனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்பது உறுதி. அப்படி அடுத்த போட்டியில் விளையாடும் அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -