- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2024 பார்டர் – கவாஸ்கர் கோப்பை : ஆஸி மண்ணில் அறிமுகமாகும் இளம் இந்திய வீரர்.. வெளியான தகவல்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்களை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்து தொடர்நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அவருக்கு நிகராக இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கும் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்றே சொல்லலாம்.

சொல்லப்போனால் அந்த தொடரில் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற உலக சாதனையை சமன் செய்தார். அது மட்டுமல்லாமல் 2022 டி20 உலகக் கோப்பையிலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்த அவர் தொடர்ந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் வாய்ப்பு:
எனவே அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்று ஜாம்பவான் வாசிம் மாக்ரம் சமீபத்தில் பாராட்டியிருந்தார். இந்நிலையில் விரைவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் துவங்க உள்ளது.

அந்த தொடரில் அவரை அறிமுகமாக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிய வந்துள்ளது. அதற்காக செப்டம்பர் மாதம் துவங்கும் துலீப் கோப்பையில் விளையாடுமாறு அவரை இந்திய அணி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது பற்றி பிசிசிஐ நிர்வாகி கூறியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அர்ஷ்தீப் சிங் பந்தை கவரக்கூடிய வகையில் நகர்த்துகிறார்”

- Advertisement -

“எனவே அவர் ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதனால் அவரை செப்டம்பர் 5ஆம் துவங்கும் துலீப் கோப்பையில் விளையாடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெறுவதற்கு ஜஸ்ப்ரித் பும்ராவுடன் அவரும் துருப்புச் சீட்டாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க: மொத்த பாகிஸ்தானும் பயப்படும்.. இந்தியாவை ஜெயிக்க வாசிம் அக்ரம் அவரை அவுட்டாக்கனும்ன்னு சொல்வாரு.. பசித் அலி

முன்னதாக இந்திய அணியில் ஷமி, சிராஜ், பும்ரா ஆகிய அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் வலது கை வீரர்களாக உள்ளனர். எனவே இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆஸ்திரேலிய மண்ணில் பந்தை ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று இந்திய அணி கருதுகிறது. அதனால் 2024 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அவருக்கு டெஸ்ட் அணி

- Advertisement -