மொத்த பாகிஸ்தானும் பயப்படும்.. இந்தியாவை ஜெயிக்க வாசிம் அக்ரம் அவரை அவுட்டாக்கனும்ன்னு சொல்வாரு.. பசித் அலி

Basit Ali 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு இருக்கும். ஏனெனில் அண்டை நாடுகளாக இருப்பதால் இருநாட்டு வீரர்களும் ரசிகர்களும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்வதை கௌரவமாக நினைப்பார்கள். சமீப காலங்களில் வேண்டுமானால் ஒருதலைப் பட்சமாக பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதாக தோற்கடித்து வரலாம்.

ஆனால் 90களில் இந்திய அணிக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய சவாலை கொடுத்தது என்றே சொல்லலாம். குறிப்பாக வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயப் அக்தர் போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக நின்று இந்தியாவை வெற்றி பெற வைப்பதில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வல்லவராக செயல்பட்டார்.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்த:
ஆம் 16 வயதிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமாகி 90களில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த சச்சின் டெண்டுல்கர் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக உருவெடுத்தார். அதனால் சச்சின் நன்றாக விளையாடும் போட்டிகளில் இந்தியா எளிதாக வெல்வது வழக்கமாகும். அதுவே சச்சின் அவுட்டானால் இந்தியாவை எதிரணிகள் எளிதாக தோற்கடித்து விடும்.

எனவே சச்சின் அவுட்டானாதும் கண்டிப்பாக தோற்று விடுவோம் என்ற எண்ணத்துடன் இந்தியாவில் அணைக்கப்பட்ட தொலைக்காட்சிகள் ஏராளமாக இருந்தன. அதனாலயே 90களில் இந்தியாவை வீழ்த்த வேண்டுமெனில் முதலில் சச்சினை அவுட்டாக்க வேண்டும் என்று எதிரணிகள் திட்டமிடுவார்கள். அதையே தங்களுடைய கேப்டன் வாசிம் அக்ரமும் அடிக்கடி சொல்வார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக முகமது அசாருதீன் போன்ற மற்ற இந்திய வீரர்களை காட்டிலும் சச்சினை பார்த்து மொத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் பசித் அலி கூறியுள்ளது பின்வருமாறு. “சச்சின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன். நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். எனவே அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை நான் பார்ப்பேன்”

இதையும் படிங்க: கம்பீர் இல்ல.. அவர் தான் முதல் முறையா 2023லயே சூர்யகுமாரை கேப்டனா கண்டுபிடிச்சாரு.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

“இந்தியாவுக்கு எதிராக வெல்ல வேண்டுமெனில் அதற்கு சச்சினை அவுட்டாக்க வேண்டும் என வாசிம் அக்ரம் எங்களுடைய அணி மீட்டிங்கிலும், சாப்பிடும் இடத்திலும், வலைப்பயிற்சியிலும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதே போல சச்சினை விரைவில் அவுட்டாக்கியதும் பாகிஸ்தான் வென்று விடும். இந்திய அணியில் மகத்தான அசாருதீன் கூட இருந்தார். ஆனால் நாங்கள் அசாருதீனுக்காக பயப்பட்டதில்லை. இருப்பினும் கண்டிப்பாக சச்சின் இருப்பது எங்களை பயமுறுத்தும்” என்று கூறினார்.

Advertisement