இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா ஓய்வுக்கு பின் ஹர்திக் பாண்டியா புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா சுமாரான ஃபிட்னஸ் காரணமாக அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில்லை என்று புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கருதுகிறார்.
எனவே அவரை கழற்றி விட்டுள்ள கம்பீர் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை தேர்ந்தெடுத்துள்ளார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கி நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் சூரியகுமார் நல்ல ஃபிட்னஸை பின்பற்றுவதால் பெரும்பாலும் காயங்களை சந்திப்பதில்லை. எனவே 2026 டி20 உலகக் கோப்பைக்கு அவரை கேப்டனாக வளர்க்க தேர்வுக் குழுவும் முடிவெடுத்துள்ளது.
கம்பீர் இல்ல:
இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான தங்கள் குழு தான் முதல் முறையாக சூரியகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவர் என்பதை கண்டறிந்ததாக பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். அதனாலேயே 2023 ஆஸ்திரேலிய டி20 தொடரில் சூரியகுமார் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுல் டிராவிட் தலைமையில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட மாம்ப்ரே இது பற்றி பேசியது பின்ருமாறு.
“கேப்டனாக ஒருவரை தேர்ந்தெடுக்கும் போது முதலில் அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அதன் அடிப்படையில் பயிற்சியாளர்களான நாங்களும் தேர்வாளர்களும் சூரியகுமார் நீண்ட காலம் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார் என்று உணர்ந்தோம். டி20 கிரிக்கெட்டில் அவர் மிகச்சிறந்த வீரர். சூரியகுமார், ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் தான் தற்சமயத்தில் ஃபார்மின் அடிப்படையில் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களாக உள்ளனர்”
“இந்தியாவுக்காக போட்டிகளை வெல்வதில் அவர் கொண்டிருக்கும் தாக்கம் தனித்துவமானது. இந்திய அணியில் அவர் இளம் வீரர்களுடன் பேசுவதை நாங்கள் பார்த்துள்ளோம். விராட், ரோகித் போன்ற நட்சத்திரங்களை போலவே சூரியகுமாரும் அனுபவம் கொண்டவர். ஆனால் அவர் இளம் வீரர்களுடன் நெருக்கமாகவும் நட்பாகவும் இருக்கிறார். அதனால் இளம் வீரர்களிடம் அவர் நிறைய மரியாதையையும் பெற்றுள்ளார்”
இதையும் படிங்க: சிஎஸ்கே கடவுள் கொடுத்த பரிசு.. மஹி பாய் இல்லனா யாருன்னே தெரியாம போய்ருப்பேன்.. பதிரனா நெகிழ்ச்சி
“எனவே இளம் வீரர்கள் தம்மிடம் பேசும் போது அவரால் நல்ல தொடர்பை வைத்திருக்க முடியும். அப்படி அணியில் உள்ள அனைவரிடமும் அவர் நல்ல உறவைக் கொண்டுள்ளார். இன்னும் நிறைய கிரிக்கெட்டை தன்னுள் கொண்டுள்ள அவரால் குறைந்தது 4 – 5 வருடங்கள் விளையாட முடியும். அதனால் அடுத்த 2 டி20 உலகக் கோப்பைக்கு அவரால் இந்திய அணியை வழி நடத்த முடியும்” என்று கூறினார்.



