சிஎஸ்கே கடவுள் கொடுத்த பரிசு.. மஹி பாய் இல்லனா யாருன்னே தெரியாம போய்ருப்பேன்.. பதிரனா நெகிழ்ச்சி

Pathirana 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாட உள்ளது. ஜூலை 27ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் இந்தியாவை தோற்கடித்து மறுமலர்ச்சி பெறும் முனைப்புடன் இலங்கை விளையாட உள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டு வரும் அந்த அணி 2024 டி20 உலகக் கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறியது.

எனவே இம்முறை புதிய கேப்டன் அசலங்கா மற்றும் பயிற்சியாளர் சனாத் ஜெயசூர்யா தலைமையில் சொந்த மண்ணில் இந்தியாவை தோற்கடிக்கும் முனைப்புடன் இலங்கை தயாராகி வருகிறது. இம்முறை அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஸா பதிரனா இந்திய அணிக்கு சவாலை கொடுக்கும் வீரராக அறியப்படுகிறார். ஏனெனில் ஜாம்பவான் மலிங்கா போல ஸ்லிங்கா ஆக்சனை கொண்ட அவர் தரமான யார்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே வாய்ப்பு:
அத்துடன் ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் விளையாடும் அவர் இதுவரை 18 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். குறிப்பாக 2023 சீசனில் 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார். இந்நிலையில் மஹீஸ் தீக்சனா உள்ளிட்ட இலங்கை வீரர்களுக்கு சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்பு கடவுள் அள்ளிக்கொடுத்த கொடுத்த பரிசு என பதிரனா கூறியுள்ளார்.

அத்துடன் தோனி தலைமையில் சிஎஸ்கே அணியில் விளையாடாமல் போயிருந்தால் தமக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் பலருக்கும் தாம் யார் என்று தெரியாமல் போயிருக்கும் எனத் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அண்டர்-19 அளவில் விளையாடி முடித்த பின் எனக்கு எந்த வகையான இலங்கை அணியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை”

- Advertisement -

“ஆனால் அப்போது நான் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமானேன். அந்த வாய்ப்பில் அசத்தியதால் சீனியர் இலங்கை அணிக்கும் நான் தேர்வு செய்யப்பட்டேன். உண்மையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. ஏனெனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடாத வரை என்னை பெரும்பாலானவர்களுக்கு தெரியாது”

இதையும் படிங்க: ராகுல் டிராவிடுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 4 ஐ.பி.எல் அணிகள். எந்த அணிக்கு பயிற்சியாளராக மாறப்போகிறார்?

“எம்எஸ் தோனி அவர்களுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொண்டு விளையாடியது இலங்கையில் இருந்து வரும் என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலாகும்” என்று கூறினார். முன்னதாக ஐசிசி தொடர்களில் மட்டும் பயன்படுத்தினால் பதிரனா இலங்கையின் சொத்தாக இருப்பார் என்று தோனி ஐபிஎல் தொடரின் போது பாராட்டினார். அந்த வகையில் தோனியின் பாராட்டைப் பெற்ற பதிரனா இம்முறை இந்தியாவுக்கு சவாலை கொடுக்க தயாராகி வருகிறார்.

Advertisement